WACH: மீண்டும் செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்...

நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. 

Last Updated : Feb 7, 2019, 12:44 PM IST
WACH: மீண்டும் செல்பி எடுத்தவரின் செல்போனை தட்டிவிட்ட சிவகுமார்... title=

நடிகர் சிவக்குமார் திருமண நிகழ்ச்சி ஒன்றில் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன. 

இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராமதாஸ் இல்ல திருமண விழாவில் பங்கேற்க சிவக்குமார் சென்று இருந்தார். அங்கு இருந்த நபர் ஒருவர் சிவக்குமாருடன் சேர்ந்து செல்ஃபி எடுக்க முயன்றார். முகத்திற்கு நேராக செல்போனை வந்து அந்த நபர் நீட்டிய போது, சிவக்குமார் அதனை தட்டிவிடுவது போன்ற காட்சிகள் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையம் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். இதில் நடிகர் சிவகுமாருடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனை சிவக்குமார் கீழே தட்டிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் அவருக்கு பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த இளைஞருக்கு சிவகுமார் புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். 

இதையடுத்து, இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.  

 

Trending News