வைரல் வீடியோ: அட பாவமே..! பேசிக் கொண்டிருப்பவரை தாக்கிய மின்சாரம்!

ரயில் மேடையில் சாதாரணமாக நின்று பேசிக் கொண்டிருக்கும்போது மின்சாரம் தாக்கி கீழே விழும் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 11, 2023, 09:41 PM IST
  • மின்சாரம் தாக்கி விழும் நபர்
  • ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்
  • இணையத்தில் வைரலான வீடியோ
வைரல் வீடியோ: அட பாவமே..! பேசிக் கொண்டிருப்பவரை தாக்கிய மின்சாரம்! title=

உலகில் நாம் வாழும் காலத்தில் எப்போது எதுவேண்டுமானாலும் எதுவேண்டுமானாலும்நடக்கலாம். அதற்கு உதாரணமாக ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. கரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் சோதனை செய்யும் பணியில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவர் தனது சகாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று மேலே இருந்து மின்சார கம்பி அறுந்து அவர் மீது விழுகிறது. இதில் மின் தாக்கியதில் அங்கிருந்து அவர் தூக்கிவீசப்பட்டு ரயில் தண்டவாளத்தில் விழுந்தார்.

மேலும் படிக்க | எவரெஸ்ட் சிகரத்தில் பனிபாறைகளுக்கு இடையே 200 அடி ஆழத்தில் சிக்கிய மலையேறும் வீரர்! மனதை பதற வைக்கும் காட்சிகள்!

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக செயல்பட்டு அவரை மீது அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மின் தாக்கியதில் படுகாயமடைந்த அந்த ஊழியர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதில் இருவர் நின்றுகொண்டிருக்க ஒருவர் மீது மின் கம்பி விழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் விழுந்த சமயம் நல்லவேளையாக எந்த ஒரு ரயிலும் வரவில்லை. இல்லெயென்றால் இது ஒரு கோர சம்பவமாக முடிந்திருக்கும்.

இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சியாக்கியுள்ளது. ரயில் மேடையில் சாதாரணமாக நின்று பேசிக் கொண்டிருக்கும்போது இப்படியான சம்பவம் நடைபெற்றது, விதி ஒருவரை இப்படியும் பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. @Ananth_IRAS என்ற டிவிட்டர் பக்கத்தில் தான் இந்த வீடியோ பகிரப்பட்டிருக்கிறது. ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் லைக் செய்திருக்கின்றனர். கமெண்ட் அடித்திருக்கும் நெட்டிசன்கள், இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது மனது மிகவும் வலிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | அந்த மனசுதாங்க கடவுள்: நெட்டிசன்களை பீல் பண்ண வைத்த குட்டி பையன், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News