இணையத்தை தெறிக்கவிட்ட தாத்தா பாட்டி: செம டான்ஸ், மயங்கிய நெட்டிசன்ஸ், வீடியோ வைரல்

Viral Video: இவர்கள் ஆடுவதை பார்ப்பவர்களுக்கும் எழுந்து ஆட வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இவர்களது துள்ளலும், உற்சாகவும் பிறருக்கும் பற்றிக்கொள்ளும் அளவில் உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2023, 07:41 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @p.k.nirwal என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் சுமார் 148,000 -க்கும் அதிமான லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து இதை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
இணையத்தை தெறிக்கவிட்ட தாத்தா பாட்டி: செம டான்ஸ், மயங்கிய நெட்டிசன்ஸ், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 

நடன வீடியோக்களுக்கு இணையவாசிகளிடம் எப்போதும் சிறப்பான நாட்டம் இருக்கும். பல வித நடன வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நடனத்துக்கான ஒரு ஆர்வம் இருக்கும் என கூறுவார்கள். இதற்கு வயது வித்தியாசமோ, அந்தஸ்து வித்தியாசமோ, பதவி வித்தியாசமோ கிடையாது. வாய்ப்பு கிடைத்தவுடனேயே அனைவரின் உள்ளிருக்கும் டான்சரும் வெளியே வந்துவிடுகிறார். சிலர் யாருக்கும் தெரியாமல் நடனமாட விரும்புகிறார்கள், சிலரோ, அனைவருக்கும் மத்தியில், தங்கள் நடனத்தை துவக்கி விடுகிறார்கள். 

சமீபத்திலும் அப்படி ஒரு அசத்தலான நடன வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதில் வயதான ஒரு ஜோடியின் நடனத்தை மட்டுமல்ல ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள பாசத்தையும் காண முடிகின்றது. இந்த வீடியோவில் ஒரு வயதான கணவனும் மனைவியும் 'கல்லோ' என்ற ஹரியான்வி பாடலுக்கு நடனமாடுவதை காண முடிகின்றது. இவர்களது நடனத்தை பார்த்தால் வயது என்பது ஒரு எண்தான் என்று கூறுவது பொய்யல்ல என்று உணர வைக்கிறது.

இவர்கள் ஆடுவதை பார்ப்பவர்களுக்கும் எழுந்து ஆட வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இவர்களது துள்ளலும், உற்சாகவும் பிறருக்கும் பற்றிக்கொள்ளும் அளவில் உள்ளது. இவர்களுக்கு இடையில் இருக்கும் காதல் இந்த நடனத்திற்கு இன்னும் மெருகேற்றுகின்றது.

மேலும் படிக்க | Viral Video: கில்லாடிம்மா நீ... புலிக்கு தண்ணி காட்டிய வாத்து... மூக்கில் விரல் வைத்த நெட்டிசன்ஸ்!

வயதான் ஜோடியின் மாஸ் நடன வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by pknirwal (@p.k.nirwal)

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @p.k.nirwal என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் சுமார் 148,000 -க்கும் அதிமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து இதை வைரல் ஆக்கி வருகிறார்கள். 

நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் பகுதியில் தங்களின் பாராட்டுக்களை வெளிப்படுத்தி, அந்த ஜோடி மீது பாராட்டு மழையையும் பாச மழையையும் பொழிந்து வருகிறார்கள். இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், "எவ்வளவு அழகான ஜோடி... அவர்களின் நடனத்தில் அவர்களின் காதல் பிரதிபலிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் "ஓ! மிக அருமை! இதை மீண்டும் மீண்டும் பார்த்தேன். இது சொர்க்கத்தில் உருவாக்கப்பட்ட ஜோடி. அழகான மற்றும் அன்பான இந்த ஜோடியை கடவுள் ஆசீர்வதிப்பாராக." என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

இந்த வீடியோ நெட்டிசன்களை மிகவும் கவர்ந்துள்ளது. பலர் அதை மீண்டும் மீண்டும் பார்த்ததாக ஒப்புக்கொள்கிறார்கள். "இதை லூப்பில் பார்க்கிறேன்! மிகவும் அழகாக இருக்கிறது," என்று ஒரு பயனர் கூறியுள்ளார். "இவர்கள் இருவரும் இந்த வயதிலும் மிக நேர்த்தியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்" என்று மற்றொருவர் எழுதியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பேருந்தில் ஏறி கிலி காட்டிய குரங்கு: நம்ப முடியாத வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News