விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்கள் கோவிட் பாசிட்டிவ்!

ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் எட்டு சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 4, 2021, 06:06 PM IST
விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்கள் கோவிட் பாசிட்டிவ்! title=

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

மனிதர்களை சூறையாடியா கொரோனா (Coronavirus) தற்போது முதன் முறையாக விலங்குகளையும் (Animals) தாக்கியுள்ளது. ஹைதராபாத்தில் (Hyderabad) உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் (NZP) எட்டு ஆசிய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த சிங்கங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் பாசிட்டிவ் வந்துள்ளது. ஏப்ரல் 29ம் தேதி அன்று செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB) NZP அதிகாரிகளுக்கு வாய்வழியாக கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவை இந்த 8 சிங்கங்களையும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. இந்த சிங்கங்களில் கொரோனா வைரஸின் அறிகுறிகளும் காணப்படுகின்றன என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

ALSO READ | தொடரும் கொரோனா தாண்டவம்: 24 மணி நேரத்தில் சுமார் 3.57 லட்சம் பேர் பாதிப்பு, 3449 பேர் பலி

இதுபற்றி நகரத்தின் வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் (WRTC) இயக்குனர் டாக்டர் ஷிரிஷ் உபாதி கூறியதாவது, "நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்கியல் பூங்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எட்டு புலிகள் மற்றும் சிங்கங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டன. இருப்பினும் காட்டு விலங்குகளில் இதுபோன்ற பாதிப்புகள் இருப்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், ஹாங்காங்கில், வளர்ப்பு பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.

சிங்கங்கள் பாதிக்கப்பட்ட செய்தி வெளியான பிறகு நேரு விலங்கியல் பூங்கா இரண்டு நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இது மக்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருப்பதால், பூங்காவிற்கு அருகே வசிக்கும் மக்களிடமிருந்து காற்றின் மூலம் வைரஸ் சிங்கங்களுக்கு பரவியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது விலங்கியல் பூங்காவின் பராமரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது பணியாளர்களிடமிருந்தோ வைரஸ் பரவியிருக்கலாம் என்று பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனெனில் சமீபத்தில் 25க்கும் மேற்பட்ட பூங்கா ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News