ட்விட்டரில் மோதிக் கொள்ளும் திமுக செந்தில்குமார் மற்றும் பாமக ராமதாஸ்

தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? மோதிக்கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 26, 2019, 03:58 PM IST
ட்விட்டரில் மோதிக் கொள்ளும் திமுக செந்தில்குமார் மற்றும் பாமக ராமதாஸ் title=

புதுடெல்லி: விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என மக்களுக்கு தெரிந்திருந்ததால் திமுக தோற்றது எனக்கூறிய மருத்துவர் ராமதாஸ்-க்கு பதிலடி தரும் வரும் வகையில், திமுக எம்பி செந்தில் குமார், "தர்மபுரி" தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் அன்புமணி ராமதாஸ் தோற்றார் என பதிலடி தந்துள்ளார்.

இடைத்தேர்தலில் அதிமுக-வின் வெற்றியை அடுத்து, அந்த கட்சியின் கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், "போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

 

அதற்கு பதிலடி தரும் வகையில், மருத்துவர் ராமதாசின் ட்விட்டர் பதிவை அப்படியே, தனது ட்விட்டர் பதில் போட்டு, விக்கிரவாண்டி-க்கு பதிலாக "தர்மபுரி" என மாற்றி, தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்தார்கள் எனப்பதிவிட்டு அன்புமணி ராமதாஸ் தோற்றத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தமிழகத்தில் அதிமுக - திமுக இடையே நேரடி போட்டி இருந்தாலும், அதிக கவனம் பெற்றது திமுக - பாமக இடையே நிலவிய போட்டி மற்றும் வாரத்தை போர். தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டடணி 38 இடங்களை கைப்பற்றியது. ஒரே ஒரு இடத்தில் தான் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமகவுக்கு ஏழு இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் பாமக நிறுவனர் ராமதாசின் மகனும், முன்னால் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் செந்தில் குமார் களம் கண்டார். அந்த தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தோல்வியுற்றார்.

அந்த நாள் முதல் இன்று வரை பாமக மற்றும் திமுக இடையே கடும் வாரத்தை சண்டை அரங்கேறி வருகிறது. சமீபத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி என இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக வெற்றி பெற்றது. திமுக தோற்றது. இடைத்தேர்தல் தோல்வியை தலைவணங்கி ஏற்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Trending News