இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சாளர் அஸ்வினை, தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி உற்சாகப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முன்னதாக டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா டி20 தொடரை வென்றது. இதனையடுத்து நடைப்பெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்று இந்தியாவை பழிதீர்த்துக் கொண்டது. இதனையடுத்து டெஸ்ட் தொடர் நேற்று முதல் துவங்கியது.
பிரிமிக்ஹான் மைதானத்தில் நடைப்பெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து வருகிறது. ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 80(156) மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 0(9) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 25 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை குவித்தார்.
— Hit wicket (@sukhiaatma69) August 1, 2018
இந்நிலையில் இவரை பாராட்டும் வகையில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் "டேய், டேய்... வேற மாதிரி டா நீ, போட்றா போட்றா மாமா, தூக்கிடலாம்", என தமிழில் பேசி உற்சாகப் படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!