இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் புதிய ஹெர் ஸ்டைல் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி (MS Dhoni).அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர். 2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு வந்தது, கேப்டனானது, பல கோப்பைகளை வென்றது என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
ALSO READ | MS Dhoni-யால் இந்த 5 வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததா?
தனது ஆரம்ப கால ஆட்டங்களில் நிறைய தலைமுடியுடனே இருந்தார் தோனி. அப்போது அதே போல் நிறை முடியுடன் இருப்போர் அனைவரையுமே என்ன தோனி ஸ்டைலா என்று கேட்பது உண்டு. பின்பு அவ்வப்போது தனது ஹெர் ஸ்டைலை மாற்றி கொள்வார். இடை இடையில் முழுவதுமான முடியை எடுத்து விட்டு மொட்டை தலையில் இருப்பார்.
இந்நிலையில் தற்போது ஐபிஎல் மீண்டும் ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ள நிலையில் தோனியின் புதிய ஹெர்ஸ்டைல் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
புகழ்பெற்ற ஹெர் ஸ்டைலிஸ்ட் ஆன ஆலிம் அக்கிம் தோனியின் புதிய ஹெர் ஸ்டைலை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்த புதிய ஸ்டைலை வடிவமைத்தது மிகவும் மகிழ்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
ALSO READ | ஓய்வுக்கு முற்றுபுள்ளி! கேப்டனாக தோனி தொடருவார் என CSK நிர்வாகம் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR