நயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக நயன்தாரா இப்போது பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வருகிறார்

Last Updated : Dec 3, 2020, 05:35 PM IST
    1. தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வருகிறார் நயன்தாரா
    2. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது
    3. நயன்தாராவின் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்
நயன்தாராவின் நடிப்பை வெறுத்த தனுஷ்: வைரலாகும் வீடியோ title=

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக நயன்தாரா இப்போது பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்து வருகிறார். 

நயன்தாரா (Nayanthara) லீட் ரோலில் நடித்து பல்வேறு படங்களில் ஹிட் கொடுத்திருக்கிறார். சமீப காலமாக அவர் நடித்த அனைத்து படங்களுமே பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தவகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் "நானும் ரவுடி தான்" (Naanum Rowdy Dhaan) படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

ALSO READ | நயன்தாரா படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி மகளுக்கு வாய்ப்பு!

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி (Vijay Sethupthi) நடித்து இருந்தாலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க நயன்தாராவின் மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு படமாகத்தான் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தில் ஒரு காதுகேளாத பெண்ணாக நடித்து இருந்தார். 

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தன்னுடைய (Dhanush) நடிப்பு தயாரிப்பாளரான தனுஷிற்கு பிடிக்கவில்லை என்று நயன்தாரா விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவி வருகிறது.

ALSO READ | இந்து மதத்தை விமர்சித்ததா மூக்குத்தி அம்மன்? படத்தில் காட்டப்பட்ட போலி சாமியர் யார்?

நடிகை நயன்தாரா சிறந்த நடிப்பிற்கான பல்வேறு விருதுகளை வென்றிருக்கிறார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்திற்காக நடிகை நயன்தாரா சிறந்த நடிகைக்கான படத்திற்காக விருதை வென்று இருந்தார். இந்த விருதை வாங்கி விட்டு பேசிய நடிகை நயன்தாரா ‘நான் தனுஷுக்கு சாரி சொல்ல வேண்டும். ஏனென்றால் நடிகர் தனுசுக்கு என்னுடைய நடிப்பு இந்தப் படத்தில் சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News