உடைந்து நொறுங்கிய கால்கள்... சோஷியல் மீடியாவில் சீன் போட இந்த தப்பை பண்ணதீங்க - வைரலாகும் வீடியோ

Instagram Viral Video: டிராக்டரை வெறும் கால்களில் தூக்கும் வகையில், வினோதமாக முயற்சியெடுத்தபோது கால் உடைந்த காயமடைந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 17, 2024, 07:18 PM IST
  • இந்த வீடியோவை 2 கோடிக்கும் மேலானோர் பார்த்துள்ளனர்.
  • சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  • 3 நாள்களுக்கு முன் இன்ஸ்டாவில் இந்த வீடியோ பதிவிடப்பட்டது.
உடைந்து நொறுங்கிய கால்கள்... சோஷியல் மீடியாவில் சீன் போட இந்த தப்பை பண்ணதீங்க - வைரலாகும் வீடியோ title=

Instagram Viral Video: சமூக வலைதளங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்துவார்கள். நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள, சினிமா, கிரிக்கெட், இசை உள்ளிட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, நடனமாடியும், பாட்டு பாடியும் வீடியோ போடுவது என தங்களின் திறமைகளையும், ஆர்வங்களையும் வெளிக்காட்டுவதற்கு சமூக வலைதளங்களை ஒரு ஊடகமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். 

பேஸ்புக் - இன்ஸ்டாகிராம் செயலிகளில் ரீல்ஸ், யூ-ட்யூப் தளத்தில் ஷார்ட்ஸ் ஆகியவை என 1 நிமிடத்திற்குள்ளான வீடியோக்களின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. நீங்கள் சொல்ல வரும் விஷயத்தை அல்லது செய்ய விரும்பும் விஷயத்தை 1 நிமிடத்திற்குள் சுருக்கமாக விரைவாக வெளியிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கானரின் கவனத்தை கவர முடிகிறது. பலரின் கவனத்தை இவை பெறுவதால் சமூக வலைதளங்களில் பிரபலங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. 

வினோதமான வீடியோக்கள்...

அப்படியிருக்க சில பயனர்கள் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை பெற வினோதமான செயல்களையும், ஆபத்தான செயல்களையும் செய்து வீடியோ வெளியிடுகின்றனர். இவை யாராலும் ஊக்கவிக்கப்படவில்லை என்றாலும் தொடர்ச்சியாக அதை செய்வதன் மூலம் தங்களுக்கு என தனி அடையாளத்தை பெற்றுவிட முடியும் என கண்மூடித்தனமாக நம்புகின்றனர். சிக்கன் பக்கோடா போடும் கடாயில் சுட சுட கொதிக்கும் எண்ணெய்யில் கையை விட்டு பாட்டுப்பாடுவது, பைக்கை பிறப்புறுப்பில் கயிறு கட்டி இழுப்பது என வினோதமாகவும், ஆபத்தாகவும் இதுபோன்ற செயல்களை பலரும் சமூக வலைதளங்களில் செய்கின்றனர். 

மேலும் படிக்க | சைசெல்லாம் ஒரு மேட்டரே இல்ல... 7 அடி பாம்பை பந்தாடிய 15 செ.மீ தேள்: தூள் கிளப்பும் வைரல் வீடியோ

யாரும் இதை முயற்சிக்காதீர்கள்...

இதுபோன்றவற்றை ஊக்கப்படுத்தவே கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை சொல்ல வேண்டும். அவை அவர்களுக்கு மட்டுமின்றி இவர்களை போல் சில ஆர்வக்கோளாறுகளுக்கும் உதாரணமாக திகழ்வது இதில் கூடுதல் ஆபத்து எனலாம். இப்படியிருக்க, இங்கு ஒரு நபர் டிராக்டரை வெறும் இரண்டு கால்களை தூக்க முற்பட்ட இளைஞர் ஒருவருக்கு கடைசியில் என்ன நடந்தது என்பதை இதில் பாருங்கள். இந்த வீடியோவை பகிர்வதற்கு முக்கிய காரணமே இதேபோல் யாரும் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகும்.

தற்போது வைரலாகி வரும் வீடியோவில் 5 டன்கள் எடை கொண்ட டிராக்டரை படுத்துக்கொண்டு தனது கால்களை  வைத்து ஒருவர் தூக்க முற்பட்டார். அந்த டிராக்டரை  தூக்க முயன்றபோது, அவரின் முட்டி உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. 

@deathpOsitive என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவில் அந்த அபாயகரமான வீடியோ பதிவிடப்பட்டது. 3 நாள்களுக்கு முன்னர் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 2.7 கோடிக்கும் மேலானோர் இன்ஸ்டாகிராமில் மட்டும் பார்த்துள்ளனர். குறிப்பாக, இந்த வீடியோவை பார்த்து இதை யாரும் செய்ய வேண்டாம் என்பதே முக்கிய அறிவுரையாக இருக்கிறது.  

மேலும் படிக்க | மாணவிகளின் Prank-ல் சிக்கிய பேராசிரியர்! அவரது ரியாக்சன் இணையத்தில் வைரல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News