நொடி பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்; வைரலாகும் வீடியோ!

நெதர்லாந்து நாட்டில் ரயிலிலி சிக்கி மரணிக்க காத்திருந்த வாலிபர் நொடி பொழுதில் தப்பிச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Dec 1, 2018, 03:06 PM IST
நொடி பொழுதில் உயிர் தப்பிய வாலிபர்; வைரலாகும் வீடியோ! title=

நெதர்லாந்து நாட்டில் ரயிலிலி சிக்கி மரணிக்க காத்திருந்த வாலிபர் நொடி பொழுதில் தப்பிச் சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது!

இந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் மிதிவண்டியில் பயணித்து வந்து ரயில் வண்டியில் சிக்கி தப்பிப்பது தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. ரயில் எதிர்வரும் நிலையில் தண்டவாள கதவுகளை ரயில்வே துறை அடைத்துவைத்துள்ளது.

தடைகளை மீறி அவ்வழியாக மதிவண்டியில் வந்த வாலிபர் தண்டவாளத்தை கடக்க முற்சிக்கின்றார். ஒரு ரயில் சென்ற நிலையில், மற்றொரு ரயில் வருவதை சற்று எதிர்பார்க்காமல் தண்டவாளத்தினை மிதிவண்டியால் கடக்க முயற்சிக்கின்றார். 

அப்போது தன்னை தாக்க வந்த ரயிலிடம் இருந்து தப்பிக்க மிக வேகமாக மிதிவண்டியினை மிதித்து உயிர்பிழைக்கின்றார். உயிர் தப்பி செல்லும் அவர் தண்டவாளத்தை கடந்த சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பழையபடி தன பயணத்தினை தொடர்கின்றார்.

இச்சம்பவத்தின் அனைத்து காட்சிகளும் அருகில் இருந்த CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Trending News