ஜன்னலுக்கு வெளியே குரங்கு செய்த செயல்.. அதுவம் தினமும்: வீடியோ வைரல்

Monkey Cute Video: இந்த குரங்குகள் தினமும் ஜன்னலுக்கு வெளியே வந்து தங்களின் உணவை பெற்றுக்கொள்கிறது, ஆனால் இறுதியை வரை வீடியோவை கண்டால் கட்டாயம் அதிச்சியடைந்துவிடுவீர்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 17, 2023, 06:34 PM IST
  • பயனர்கள் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
  • குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம்.
  • இன்றைய வைரல் வீடியோ.
ஜன்னலுக்கு வெளியே குரங்கு செய்த செயல்.. அதுவம் தினமும்: வீடியோ வைரல் title=

குரங்கின் இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: என்ன வாய்ம்மா உனக்கு... இந்த வாயாடி கிளியை பேசி ஜெயிக்கிறது கஷ்டம் தான்!

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, சற்று வித்யாசமானது என்றே கூறலாம். இந்த வீடியோவை இணையத்தில் பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். ஏனெனில் இங்கு வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு குரங்கு தினமும் ஜன்னலுக்கு வெளியே தனது உணவை பெற்றுக் கொள்கிறது, அதுமட்டுமின்றி உணவு அளித்த நபரை தனது நபராகவும் ஆக்கிக்கொள்கிறது.

வைரலான வீடியோவில், தினமும் ஒரு குரங்கு கட்டிடத்தின் ஜன்னலிலிருந்து கேரட், திராட்சைகளை எடுத்துச் செல்வதையும், அந்த நபர் தனது கையால் மிகுந்த அன்புடன் உணவளிப்பதையும் காணலாம். இப்பிடி ஒரு நாள் உணவளித்த நபர் அந்த குரங்கிடம் கைகுலுக்க கையை நீட்டினார், அப்போது குரங்கும் அவருடன் கைகுலுக்கிவிட்டு சென்றுவிடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கு செய்யும் கியூட் செயலை இந்த வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ghantaa (@ghantaa)

இந்த வீடியோ Ghantaa என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது, இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் அந்த வீடியோவுக்கு வந்துள்ளன, மேலும் இந்த வீடியோவுக்கு மக்கள் பலவித கருத்துகலையும் தெரிவித்து வருகின்றனர். இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல விலங்குகளின் வேடிக்கையான வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | பாம்பு vs கீரி.. இப்படியொரு ஃபைட் அ எங்கையும் பார்த்திருக்க மாட்டீங்க: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News