ஏய் நான் எவ்வளவு அழகு தெரியுமா: க்ளோஸப் போஸ் கொடுக்கும் சிறுத்தை

கேமராவை சோதனை செய்யும் சிறுத்தை! சிறுத்தைப்புலி இல்லை என்று சொன்னால், நான் இருக்கிறேன் என்று அட்டெண்டன்ஸ் போட்ட சிறுத்தை

Last Updated : May 5, 2022, 06:39 PM IST
ஏய் நான் எவ்வளவு அழகு தெரியுமா: க்ளோஸப் போஸ் கொடுக்கும் சிறுத்தை title=

இன்று உலகமே இணையத்தினால் இணைந்திருக்கிரது. இணைய உலகில், பகிரப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ஆச்சரியத்தையும் திகைப்பையும் திகிலையும் ஏற்படுத்துகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் பல வைரலாகிறது. அதில் விலங்குகளின் வித்தியாசமான வீடியோக்கள் விரைவில் வைரலாகின்றன.

இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள நம்மை சில சமயம் சிரிக்க வைத்தால், பல சமயங்களில் சிந்திக்க வைக்கின்றன. சில உண்மைகளை புரிய வைக்கவும் இந்த வீடியோக்கள் உதவுகின்றன. 

தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள், கண்காணிப்பு காணொளிகளாகவும் இருக்கின்றன.

வன விலங்குகள் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரலாகின்றன. 

மேலும் படிக்க | முதலையிடம் சிக்கிய வரிக்குதிரைக் கூட்டம்; பதற வைக்கும் காட்சி 

நீரிலும் நிலத்திலும் திறமையாக வேட்டையாடும் திறன் பெற்ற சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதை அறிய, காட்டுக்குள் வனத்துறை அதிகாரிகள் ஆங்காங்கே கேமராக்களை வைப்பது வழக்கம்.

அதில் பதிவாகியுள்ள ஒரு வீடியோவில், சிறுத்தை ஒன்று கேமராவுக்கு முன்னே வந்து நின்று போஸ் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இவ்வளவு நெருக்கமாக சிறுத்தையை யாருமே பார்த்திருக்க முடியாது. சிறுத்தையின் கண்கள், உடலில் உள்ள புள்ளிகள், சருமத்தின் வகை என இந்த வீடியோவில் சிறுத்தை மிகவும் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

உண்மையில், இந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், கண்காணிப்புக்காக பல நாட்களாக கேமரா புதருக்குள் வைக்கப்பட்டிருந்தது.

கேமராவை அகற்றிவிடலாமா என்று வனத்துறையினர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சிறுத்தை வந்து தனது  இருப்பை சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.

நெருக்கமாக வந்து கேமராவுக்கு முன் போஸ் கொடுத்த சிறுத்தை, ஓங்கி அறைந்திருந்தால் கேமரா சுக்குநூறாக சிதறியிருக்கும்.

ஜாலியாக உலாத்தும் சிறுத்தை, அங்கும் இங்கும் திரும்பி போஸ் கொடுத்து சென்றுள்ளதைப் பார்க்க நெட்டிசன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அமைதியானது என்று நம்பும்படி சூப்பராக க்ளோஸப் போஸ் கொடுத்து செல்கிறது இந்த அழகான சிறுத்தை.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, வைரல் வீடியோவுக்கு கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் நெட்டிசன்கள், ஈமோஜிகள் மூலம் சிறுத்தையின் அழகை ரசித்து, அன்பைப் பொழிகின்றனர்.

சிறுத்தையின் இந்த வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாவதைப் பார்த்து, சிறுத்தை சாதுவாக இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் என்று சிறுத்தை நிரூபிக்கும் வீடியோவை நீங்கள் இன்னும் சில நாட்களில் பார்க்கலாம்.

மேலும் படிக்க | சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News