‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ

ஒரு குழந்தை தன் தாய் எங்கிருந்தாலும் உடனடியாக அவரை அடையாளம் கண்டுவிடுகிறது. ஆனால், தன் தாய் போல் பலர் அமர்ந்து, முகத்தையும் மூடிக்கொண்டிருந்தால், அக்குழந்தையால் தன் தாயை சரியாக கண்டுபிடிக்க முடியுமா? 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2022, 02:44 PM IST
  • அம்மாவைத் தேடும் குழந்தையின் வீடியோ.
  • கியூட்டான இந்த வீடியோ வைரல் ஆனது.
  • இணையவாசிகள் வீடியோவை ரசித்து வருகிறார்கள்.
‘என் அம்மா யாரு?’ குறும்புக்கார அம்மாவை தேடும் கியூட் குழந்தையின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

ஒரு குழந்தை தன் தாய் எங்கிருந்தாலும் உடனடியாக அவரை அடையாளம் கண்டுவிடுகிறது. ஆனால், தன் தாய் போல் பலர் அமர்ந்து, முகத்தையும் மூடிக்கொண்டிருந்தால், அக்குழந்தையால் தன் தாயை சரியாக கண்டுபிடிக்க முடியுமா? இப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இந்த வீடியோவில் சில பெண்கள் முக்காடு போட்டு அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது ஒரு குழந்தை வந்து இந்த பெண்களில் யார் தன் தாய் என்று குழம்பி பார்க்கிறது. ஆனால் இறுதியில் குழந்தை தன் தாயை அடையாளம் கண்டு கொள்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் இந்த வீடியோவில், முதலில் ஒரு சிறு குழந்தை அறைக்குள் நுழைவதைக் காண முடிகின்றது. ஆனால் அங்குள்ள காட்சியைப் பார்த்து அது ஆச்சரியப்படுகிறது. ஏனென்றால் அறையில் பல பெண்கள் முக்காடு போட்டு ஒரே மாதிரியான புடவை அணிந்து அமர்ந்திருக்கிறார்கள். குழந்தையால் தனது தாயை அடையாளம் காண முடியவில்லை. எனினும், சிறிது யோசித்து பின்னர் அது தனது தாயை அடையாளம் கண்டுகொள்கிறது. தனது தாய் இதுதான் என தெரிந்தவுடன் குழந்தை அவர் மடியின் மீது ஏறிக்கொள்கிறது. தாய்-மகனின் பாசத்தை விளக்கும் இந்த அழகான வீடியோவை மக்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தண்ணீர் ஊற்றி வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் உக்ரைன் வீடியோ! சும்மா அதிருதில்ல!!

அம்மாவைத்  தேடும் குழந்தையின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ status.fan.tranding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. 'தாய்க்கு நிகர் யாரும் இல்லை’ என்று இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 'அம்மாவுக்கும் மகனுக்கும் இடையிலான உறவு இதுதான்' என்று இந்த வீடியோவுக்கு ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

‘மிகவும் அழகான வீடியோ’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | ‘ப்ப்பா... செமயா இருக்கு’ மோமோஸ் சாப்பிட்ட மணப்பெண்ணின் ரியாக்‌ஷன்: வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News