சீண்டிய இளைஞர்களை வெச்சி செஞ்ச பெண்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Viral Video: பெண்ணை சீண்டினால் என்ன நடக்கும்? பெண் பதிலடி கொடுத்தால் எப்படி இருக்கும்? இதைக்காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 3, 2023, 01:22 PM IST
  • உணவு பரிமாறும் போது தவறாக நடந்துகொண்ட இளைஞர்கள்.
  • தனது தாக்குதலால் மாஸ் காட்டிய பெண்.
  • பெண்ணின் மாஸான தாக்குதலை இந்த வீடியோவில் காணலாம்.
சீண்டிய இளைஞர்களை வெச்சி செஞ்ச பெண்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: பெண்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கவலையை அளிக்கும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல நாடுகள் பல சட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இருப்பினும், குற்றங்கள் குறைந்தபாடில்லை, தினம் தினம் தொடர்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளில், குற்றத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும் குற்றவாளிகளுக்கு எதிராக போராடுவதும் பெண்களுக்கு மிக கடினமாக உள்ளது. பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தாங்களே பல வித தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் இன்று எழுந்துள்ளது. 

பெண்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகும் வீடியோக்களும், அவற்றை எதிர்த்து அவர்கள் துணிச்சலுடன் போராடும் வீடியோக்களும் பல சமயம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தற்போது அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. இது பார்ப்பவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்டும் வகையில் உள்ளது. 

இந்த வீடியோ ஒரு உணவகத்தின் சிசிடிவி-யில் பதிவான வீடியோவாகத் தோன்றுகிறது. ஒரு உணவகத்தில் உணவு அருந்த வந்த இரண்டு இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டதை அடுத்து, அவர்களுடன் சண்டையிடத் தொடங்கிய பணிப்பெண் ஒருவரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. தற்போது அந்த பெண்ணின் துணிச்சலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | 'ஹாய்.. என் கூட பேசுவியா?’: பூச்சியுடன் பேசும் குழந்தை.. வைரலாகும் செம கியூட் வீடியோ

உணவு பரிமாறும் போது தவறாக நடந்துகொண்ட இளைஞர்கள் 

வீடியோவில் காணப்படுவது போல, பெண் பணியாளர் ஒரு மேஜையில் அமர்ந்துள்ள இரண்டு இளைஞர்களுக்கு உணவு பரிமாறுவதைக் காண முடிகின்றது. திடீரென்று ஒரு இளைஞன் எழுந்து அந்த பெண்ணை தன்னுடன் வரும்படி வற்புறுத்துகிறார். உடனே அப்பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பின்வாங்கிகிறார். இருப்பினும், இளைஞர் அப்பெண்ணைத் தன் பக்கம் இழுக்க முயல்கிறார். மேலும் வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணை அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார். 

நிலைமை மோசமாகவே தனது தற்காப்பு கலையை பயன்படுத்த வேண்டும் என பெண்ணுக்கு தோன்றுகிறது. பெண் அதிரடியாக செயல்பட்டு இளைஞனுக்கு ஒரு சக்திவாய்ந்த பஞ்ச் கொடுக்கிறார். அதன் பிறகு மற்றொரு இளைஞன் அவரை தாக்க வரவே, அவர் அந்த இளைஞனையும் தாகுகிறார். இந்த வகையில் அவர் இரு இளைஞர்கள் மீதும் குத்து மழை பொழியத் தொடங்குகிறார். இருவரையும் நன்றாக அடித்து உதைக்கிறார். இதை அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

பெண்ணின் மாஸான தாக்குதலை இந்த வீடியோவில் காணலாம்:

தனது தாக்குதலால் மாஸ் காட்டிய பெண்

முதலில் பெண்ணை ஒரு இளைஞன் சீண்டி வாங்கிக்கட்டிக்கொள்கிறார். பின்னர், அவருக்கு உதவச்சென்ற அவரது நண்பனுக்கும் இதே நிலைதான் ஏற்படுகின்றது. தன்னை சீண்ட வந்த இரு இளைஞர்களையும் பெண் அசால்டாக பந்தாடி விடுகிறார். கோபமடைந்த இளைஞன் அந்த பெண்ணின் மீது நாற்காலியை வீசி தாக்குகிறார். ஆனால், அதையும் பெண் லாவகமாக கையாள்கிறார். 

இந்த வீடியோ ட்விட்டரில் ‘caption this.' என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இது ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். அனைவரும் இளைஞர்களை திட்டித் தீர்த்ததொடு, பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | ஒரு சீட்டுக்கு இப்படியா..ஓடும் ரயிலில் களேபரம்..அதிர வைக்கும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News