மனிதர்களுக்கு மட்டுமே ஆறு அறிவு இருக்கும் என சொல்லப்பட்டாலும், விலங்குகளிடம் அதனை நாம் ஒரு சில சமயங்களில் கண்கூடாக பார்க்கலாம். அவற்றுக்கும் வித்தியாசமாக யோசிக்கும் திறனெல்லாம் இருக்கிறது. வனப்பகுதியில் உயிர் பிழைக்க அவை நடத்தும் சாகசங்கள் எராளமாக இருந்தாலும், மனிதர்களுடன் வாழும் விலங்குகளில் அறிவார்ந்து சிந்திக்கும் சந்தர்ப்பங்களை மிக சொற்பமாகவே பார்க்க முடியும். அப்படியான மாடு வீடியோ ஒன்று தான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அப்படி என்ன வித்தியாசமாக செய்துவிட்டது என கேட்கிறீர்களா?. கம்பி ஒன்றில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கம்பியில் இருந்து கயிற்றை சுற்றி, கம்பியை பிடுங்கியே எறிந்துவிடுகிறது அந்த மாடு.
மேலும் படிக்க | ஏய் இது பாம்பு டான்ஸ்ப்பா! பாங்கரா இல்லை! கன்ஃப்யூஸ் ஆன சீக்கிய டான்சர்கள்
அதற்காக அது கையாண்ட யுக்தி தான் பேசுபொருளாக இருக்கிறது. எப்படியெல்லாம் யோசிக்குதப்பா மாடு? என வீடியோவை பார்த்தால் நீங்களே வியந்துபோவீர்கள். @aadaavaan என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் கருப்பு நிறத்தினாலான மாடு ஒன்று கம்பி ஒன்றில் கயிறு மூலம் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது திடீரென மாடு நீளமாக இருக்கும் கயிற்றை கொம்பில் சுற்றுகிறது. தலையை கீழே கவிழ்த்து கயிற்றை கொம்பில் சுற்றும் மாடு, சிறிது நேரத்தில் அந்த கயிறு கட்டியிருக்கும் கம்பியை லாவகமாக பிடுங்கிவிடுகிறது. இது என்னப்பா புது டெக்னிக்காக இருக்கிறது என இணையவாசிகளும் பலரும் மாட்டின் செயலை கண்டு வியந்துள்ளனர்.
(@aadaavaan) June 2, 2023
டிவிட்டரில் மட்டும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 180க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றிருக்கிறது இந்த வீடியோ. வீடியோ கேப்சனிலேயே, இந்த மாடு நிச்சயமாக முன்ஜென்மத்தில் என்ஜினியராக தான் இருந்திருக்கும். இப்போது மாடாக பிறந்துவிட்டது போல தெரிகிறது என கிண்டலாக எழுதப்பட்டிருக்கிறது. மாட்டின் ஸ்மார்ட்டான யோசனை வீடியோ பார்க்கும் எல்லோரையும் வியக்க வைக்கிறது.
மேலும் படிக்க | மாமியாருடன் மாப்பிள்ளையின் குத்தாட்டம்... ஷாக்கில் மணமகள்.. நாமும்தான்: வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ