மாஸ் காட்டும் மாடு, பியூஸ் போன சிறுத்தை: ரசிக்கும் நெட்டிசன்ஸ், வைரலான வீடியோ

Animal Viral Video: இந்த வீடியோவை பார்த்தால், இதில் நடப்பதை யாராலும் நம்ப முடியாது. சிறுத்தையிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் பசுமாட்டின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 30, 2022, 12:39 PM IST
  • சிறுத்தைகள் வேட்டையாடுவதில் வல்லமை படைத்தவை.
  • தங்கள் இரையை அடையாளம் கண்டுவிட்டால், அவை சிறிதும் தாமதிக்காமல் அவற்றின் மீது தாக்குதல் நடத்தும்.
  • ஆனால், இந்த வீடியோவில் நாம் காணும் காட்சி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
மாஸ் காட்டும் மாடு, பியூஸ் போன சிறுத்தை: ரசிக்கும் நெட்டிசன்ஸ், வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சிறுத்தைகள் சில சமயங்களில் உணவு தேடி மனித குடியிருப்புகளை அடைந்து கால்நடைகளை இரையாக்குகின்றன. அப்படி ஒரு சிறுத்தையின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மிகவும் அரிய காட்சி ஒன்று இந்த விடியோவில் காணக்கிடைக்கின்றது. 

சிறுத்தைகள் வேட்டையாடுவதில் வல்லமை படைத்தவை. தங்கள் இரையை அடையாளம் கண்டுவிட்டால், அவை சிறிதும் தாமதிக்காமல் அவற்றின் மீது தாக்குதல் நடத்தும். ஆனால், இந்த வீடியோவில் நாம் காணும் காட்சி மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு சிறுத்தை பசுவை இரையாக்குவதற்கு மிக மெதுவாக பசுவிற்கு தெரியாமல் அதன் அருகில் செல்வதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு அங்கிருந்து ஓடி விடுகிறது. ஏன் இந்த மாற்றம்? 

அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் மனித குடியிருப்புகள் காரணமாக, வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் பொதுவானதாகிவிட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், சில நேரங்களில் மனிதர்களும் சில சமயங்களில் வன விலங்குகளும் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஒருவரையொருவர் தாக்குகின்றன.

மேலும் படிக்க | இங்க பாருடா...கதவிடுக்கில் இவ்ளோ பெரிய பாம்பு, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ 

மாட்டின் அருகில் சென்ற சிறுத்தை 

சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், இரவின் இருளில், ஒரு சிறுத்தை பசுவின் அருகே வருவதைக் காண முடிகின்றது. ஆனால், அதற்கு முன்னால் அது நீண்ட நேரம் யோசித்துக்கொண்டு இருக்கிறது. பின்னர் ஒரு முடிவெடுத்தாற்போல, பசுவின் பின்னால், அதற்கு தெரியாமல் மெதுவாக போகிறது. பசு புல் மேய்ந்துகொண்டு இருக்கிறது. தனக்கு அருகில் வேட்டையாடும் விலங்கு இருப்பதைக் கூட அது உணரவில்லை. இருப்பினும், சிறுத்தை வெளிச்சத்தைப் பார்த்தவுடன், அது ஓடி, பசுவின் அருகில் செல்கிறது. ஒரு கணம் அது மாட்டை வேட்டையாடும் என தோன்றுகிறது. ஆனால் அது அப்படி எதையும் செய்யவில்லை. அதே போல், சிறுத்தையைப் பார்த்த மாடு சற்று அதிர்ச்சியடைகிறது. ஆனால் சில வினாடிகளில் அது மீண்டும் புல் மேயத் தொடங்குகிறது. பின்னர் சிறுத்தையும் மாட்டை விட்டு விலகி ஓடிவிடுகிறது. இந்த சம்பவம் எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை.

வைரலான அதிர்ச்சி வீடியோவை இங்கே காணலாம்:

'சிறுத்தை டயட்டில் உள்ளது...'

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனர் vikrantsmaik நவம்பர் 27 அன்று வெளியிட்டார். இது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘கடவுளின் அருள் இருந்தால்.. யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. மாட்டுக்கு கடவுளின் அருள் உள்ளது’ என ஒருவர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், ‘சிறுத்தை டயட்டில் உள்ளது. அதனால் அது மாட்டை வேட்டையாடவில்லை’ என வேடிக்கையாக எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | மேடையிலேயே இப்படி ஆனா எப்படி? புதுமண ஜோடியின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News