'அம்மாவ அடிக்கக்கூடாது, சொல்லிட்டேன்’ அப்பாவை மிரட்டும் குழந்தை, நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ

Small Girl Funny Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்கள் முகத்தில் தானாகவே புன்னகை பூக்கும். ஒரு குட்டி பெண் குழந்தையின் கியூட் வீடியோ வைரலாகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2023, 11:50 AM IST
  • சமூக ஊடகம் ஒரு பூங்கொத்து போன்றது.
  • அங்கு பல்வேறு வண்ணங்களில் மலர்கள் தினமும் காணப்படுகின்றன.
  • குறிப்பாக குழந்தைகளின் கியூட் வீடியோக்கள் நம் நெஞ்சை அள்ளும் வகையில் இருக்கின்றன.
'அம்மாவ அடிக்கக்கூடாது, சொல்லிட்டேன்’ அப்பாவை மிரட்டும் குழந்தை, நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குட்டி குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமூக ஊடகம் ஒரு பூங்கொத்து போன்றது, அங்கு பல்வேறு வண்ணங்களில் மலர்கள் தினமும் காணப்படுகின்றன. சில சமயங்களில் குழந்தையின் அழகும், சில சமயங்களில் பெரியவர்களின் வேடிக்கையான பாணியும் வைரலாகிறது. குறிப்பாக குழந்தைகளின் கியூட் வீடியோக்கள் நம் நெஞ்சை அள்ளும் வகையில் இருக்கின்றன. 

தற்போது, ஒரு குட்டிப்பெண்ணின் மிக கியூட்டான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சிறுமியின் தந்தை வேடிக்கையாக சிறுமியின் தாயை அடிப்பது போல பாசாங்கு செய்ய, அதற்கு சிறுமி வெகுண்டு தந்தைக்கு அறிவுரை வழங்குகிறார். 

மேலும் படிக்க | ராட்சத மலைப்பாம்பின் மீது சவாரி செய்யும் குட்டிப்பெண்: வீடியோ வைரல் 

தந்தை மீது கோவம் வந்தாலும், அப்படி அடிப்பது மிக தவறான விஷயம் என அந்த சிறுமி அன்புடன் கூறி புரிய வைக்கிறார். சிறுமியின் அட்டகாசமான பாணியும், ஸ்டைலும் வேகமாக வைரல் ஆகி வருகின்றது. 

தந்தைக்கு புரிய வைத்த சிறுமி

இந்த வீடியோவில், பெற்றோர்கள் தங்கள் மகள் முன் ஒரு நாடகம் நடத்துவதை காண முடிகின்றது. தாயை அடிப்பது போல தந்தை நடிக்க, குழந்தைக்கு பயங்கர கோவம் வந்துவிடுகிறது. சிறுமி தந்தையை இரண்டு மூன்று முறை அடித்துக்கூட விடுகிறார். அதுமட்டுமல்ல, தாயை அடிப்பது சரியான விஷயம் அல்ல என தன் அப்பாவிடம் சிறுமி எடுத்துக்கூறுகிறார். 

ஆனால் தந்தை மீண்டும் தனது தாயை அடிக்க அவருக்கு இன்னும் கோவம் வருகிறது. அவர் மீண்டும் தந்தை மீது கோபமாகி தன் மழலை பாஷையில் கோவத்துடனும், அதே சமயம் மிக பொறுமையாகவும் அம்மாவை இப்படி அடிக்கக்கூடாது என தந்தையிடம் பேசி புரிய வைக்கிறார். 

சிறுமியின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@giedde)

பெண் குழந்தையின் இந்த அழகான வீடியோ சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. இது giedde Mammi என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: மல்லுக்கட்டும் பூனைக் குட்டிகள்! இது பூனைகளின் மல்யுத்த போட்டி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News