’நான் அழுக்கு பையன் இல்ல’ குதூகலமாக குளிக்கும் குட்டியானை; வைரல் வீடியோ

குதூகலமாக குட்டியானை குளிக்கும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 27, 2022, 04:14 PM IST
’நான் அழுக்கு பையன் இல்ல’ குதூகலமாக குளிக்கும் குட்டியானை; வைரல் வீடியோ title=

யானைகளின் வீடியோவுக்கு எப்போதும் இணையத்தில் வரவேற்பு இருக்கும். மிரட்டல், கொஞ்சல் என எந்த பாவணையில் யானைகள் இருந்தாலும், அவற்றை மக்கள் ரசிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். கொஞ்சும்போது குழந்தை அழகில் தெரியும் யானை, ஆக்ரோஷமாகும்போது எதிரில் இருப்பவர்கள் தலைதெறிக்க ஓடியே ஆக வேண்டும். அந்தளவுக்கு மோசமானது யானை. அதேபோல், குட்டி யானையின் சேட்டைகளும் ரசிப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தாய் யானையுடன் சேர்ந்து செல்லும்போது அவை செய்யும் சேட்டைகளை காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகள் வேண்டும்.  

மேலும் படிக்க | Video : அடிதடியில் முடிந்த அழகிப்போட்டி... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

தாய் யானை நடந்து செல்லும்போது அதன் கால் வழியே புகுந்து புகுந்து செல்லும் குட்டியானை, திடீரென குட்டிக்கரணமும் போடும். தண்ணீரை கண்டால் அலாதி பிரியம் கொள்ளும். உடனே தண்ணீருக்குள் இறங்கி குளித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும். அப்படியாக, தண்ணீரை கண்டவுடன் குளிக்க செல்லும் குட்டி யானை ஒன்றின் வீடியோ இப்போது இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் படிக்கட்டுகள் வழியாக வழிந்தோடும் தண்ணீரை பார்த்தபடியே இறங்கிச் செல்கிறது குட்டியானை.

மெதுமெதுவாக தண்ணீருக்கு அருகில் செல்லும் யானைக்குட்டிக்கு குதூகலத்தை அடக்க முடியவில்லை. உடனே தண்ணீருக்குள் குதித்து முட்டி மோதி விளையாடுகிறது. செல்லமாக இருக்கும் யானைக் குட்டி, நான் நல்ல பையன், அழுக்கு பையன் இல்லை என்பதை கூறுவதுபோல் குதித்து குதித்து விளையாடுகிறது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | ஜெய் ஆஞ்சநேயா...! மண்டியிட்டு வேண்டி கோயில் உண்டியலை தூக்கிச்சென்ற திருடன் - வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News