Viral Video: முதலையின் டார்கெட்டில் இருந்து தப்பித்த சிறுத்தை

முதலையின் டார்க்கெட்டில் இருந்து தப்பித்த சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 29, 2022, 04:42 PM IST
  • சிறுத்தையை அட்டாக் செய்யும் முதலை
  • கணப்பொழுதில் தப்பித்து ஓடுகிறது
  • பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வைரல்
Viral Video: முதலையின் டார்கெட்டில் இருந்து தப்பித்த சிறுத்தை title=

வல்லவனுக்கும் வல்லன் இருப்பான் என்ற பழமொழி புழக்கத்தில் இருக்கக்கூடிய ஒன்று. நான் தான் பெரியவன் என்று கூறும் எவருக்கும் மேலான ஒருவன் இருப்பான் என்பது அசைக்க முடியாத உலக்கத்தினுடைய நியதி. மனிதர்களாக இருந்தாலும் சரி, விலங்குகளாக இருந்தாலும் சரி இந்த பழமொழி நிச்சயம் பொருந்தும். எலியை வேட்டையாடும் பாம்பு, கீரியிடம் சிக்கும். மானை வேட்டையாடும் புலி, முதலைக்கு இரையாகும். அதே முதலை சிறுத்தைக்கும் இரையாகும். துரத்தி துரத்தி வேட்டையாடும் சிங்கம் கூட கழுதை புலிகளிடம் இருந்து தப்பிப்பது கடினம். இவையெல்லாம் அன்றாடம் வனப்பகுதியில் நடக்கக்கூடிய விஷயங்கள்

மேலும் படிக்க | சாலை உலா செல்லும் வாத்துக் குடும்பம்: போக்குவரத்து காவலரின் மனிதாபிமான உதவி

இது தொடர்பான வீடியோக்களை நீங்கள் இணையத்தில் தேடிப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜாக்குவார் ஒன்று நீரில் மிதந்து கொண்டிருந்த முதலையை, தண்ணீருக்குள் தாவிக்குதித்து வேட்டையாடி செல்லும் வீடியோ வெளியாகியிருந்தது. பார்ப்பதற்கே மிரட்சியை ஏற்படுத்தும் வீடியோவாக அது இருந்தது. அதாவது, முதலையின் இடத்துக்கே சென்று கம்பீரமாக வேட்டையாடி, தப்பிப்பதற்காக அத்தனை முறை துள்ளியும் தன்னுடைய அசுர பலத்தால் வேட்டையில் கொஞ்சமும் பிசுறு தட்டாமல் காரியத்தை கச்சிதமாக முடித்தது ஜாக்குவார். 

இந்த வீடியோ வெளியாகி இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை, முதலை ஒன்று சிறுத்தைக்கு டார்கெட் வைத்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் டார்க்கெட்டில் இருந்து ஜஸ்ட் மிஸில் தப்பித்து செல்கிறது சிறுத்தை. தாகத்தில் இருக்கும் அந்த சிறுத்தை கால்வாய் ஒன்றில் நீர் குடிக்க வருகிறது. அப்போது நீருக்குள் மறைந்திருக்கும் முதலை சிறுத்தையை அட்டாக் செய்ய காத்திருக்கிறது. நேரம் கூடி வரும் சமயத்தில் திடீரென தண்ணீரில் இருந்து மேல் எழும்பி சிறுத்தையை வேட்டையாட முயற்சிக்கிறது. கணப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் ஆபத்தை உணர்ந்து கொள்ளும் சிறுத்தை, தப்பித்தால் போதும் என்று மின்னல் வேகத்தில் ஒடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது, இணையவாசிகளையும் வெகுவாக ஈர்த்துள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: என்ன வெயிலு... பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடிக்கும் க்யூட் அணில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News