வேகமாக கொத்த வந்த பாம்பை புரூஸ்லிபோல் புரட்டி எடுத்த பூனை: வைரல் வீடியோ

வேகமாக சீறி வந்து கொத்த வந்த பாம்பை அசால்டாக நின்று கொண்டிருந்த பூனை புரூஸ்லி ஸ்டைலில் புரட்டி எடுத்த வீடியோ இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 25, 2023, 01:19 PM IST
வேகமாக கொத்த வந்த பாம்பை புரூஸ்லிபோல் புரட்டி எடுத்த பூனை: வைரல் வீடியோ title=

பாம்பை கண்டு படை நடுங்கினால்கூட பூனைகள் அதனைக் கண்டு பயப்படாது. யாருக்கு கிட்ட வந்து யாரு சீன்போடுறது என்கிற ஸ்டைலிலேயே பாம்புகளை பூனை டீல் செய்யும். இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாம்பு மற்றும் பூனையின் கெட்டிக்காரத்தனத்தைப் பொறுத்தே யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது இடத்துக்கு இடம் மாறுபடும். பூனை வலிமையாக இருந்து பாம்பு சிறியதாக இருந்தாலோ  அல்லது பாம்பு பெரியதாக இருந்து பூனை சிறியதாக இருந்தாலே, தாக்கி வெற்றி பெறக்கூடியவர்களை எளிதாக கணித்துவிடலாம். ஆனால், இரண்டும் சரிசமமாக இருக்கும்போது போடும் சண்டையில் கணிக்கவே முடியாது. அந்த சண்டையில் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. 

மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பயங்கரமான பாம்பா..எங்க ஏறுது பாருங்க: வீடியோ வைரல்

அப்படியான ஒரு சண்டை தான் வைரலாகியிருக்கும் வீடியோவில் இருக்கிறது. சீறி வரும் பாம்பு, பூனையை கொத்த முயற்சி செய்கிறது. ஆனால் பாம்பு வரும் வேகத்தை முன்பே கணித்துக் கொண்ட பூனை, பாம்பு அருகில் வரும் வரை காத்திருந்துவிட்டு, கொத்தும் சமயத்தில் தன்னுடைய காலைக் கொண்டு புரூஸ்லீ ஸ்டைலில் நசுக்கிறது. இதனை பாம்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், பாம்பை அடிக்கும் வரை பூனை, தான் இருந்த இடத்தில் இருந்து ஒரு அடிகூட நகரவில்லை. பாம்பு மிரட்டும் தொனியில் பார்த்தபோதும், அதனை கண்டு துளியும் அஞ்சாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது பூனை.

மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்பு கலை கற்றுக் கொண்டதுபோல் பூனையில் நடவடிக்கை இருக்கிறது. அது பாம்பை ஹேண்டில் செய்த விதம் இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பூனையை புரூஸ்லீ பூனை என்றே குறிப்பிட்டுள்ளனர். அதனுடைய சாமார்த்தியமும், பாம்பை எதிர்கொண்ட விதமும் வியக்க வைப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாம்பும், பூனையும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் வீடியோ @TheFigen_ என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோவை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். 

மேலும் படிக்க | பாடாய் படுத்தும் குட்டி குரங்கு, அடித்து இழுக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News