பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவால் விஜய் ரசிகர்கள் கொண்டாடம்!

பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில், 'மெர்சல்' திரைப்படத்துக்கு சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருது.

Last Updated : Mar 30, 2018, 12:13 PM IST
பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவால் விஜய் ரசிகர்கள் கொண்டாடம்! title=

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘மெர்சல்’. இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்தது. இந்தப் படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். 

எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது ‘மெர்சல்’ படம். பல சர்ச்சைகளை தாண்டி 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியது. 

இந்நிலையில் பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவில் 'மெர்சல்' சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  நேற்று லண்டனில் நடைபெற்ற பிரிட்டனின் 4-வது தேசிய திரைப்பட விழாவில், 'மெர்சல்' திரைப்படத்துக்கு இந்த விருதை விழாக்குழுவினர் அறிவித்தனர். மேலும் இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

Trending News