திருமணத்தில் தூங்கிப்போன மணமகள், டென்ஷன் ஆன மணமகன்: வைரல் வீடியோ

மணமகன் நின்றுகொண்டு காத்திருப்பதையும், மணமகள் நிம்மதியாக தூங்குவதையும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2022, 03:10 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • இந்த வீடியோ தன் திருமணத்திலேயே தூங்கிப்போன ஒரு மணமகள் பற்றியது.
திருமணத்தில் தூங்கிப்போன மணமகள், டென்ஷன் ஆன மணமகன்: வைரல் வீடியோ title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்த வீடியோ தன் திருமணத்திலேயே தூங்கிப்போன ஒரு மணமகள் பற்றியது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக உள்ளது. தூங்கும் மணப்பெண்ணின் இந்த வீடியோ ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு மக்கள் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். 

திருமணத்தில் கும்பகர்ணனைப் போல தூங்கிய மணமகள் 

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோ வைரல் (Viral Video) ஆகி வருகின்றது. திருமண மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகன் மேடையில் அமர்ந்துள்ளார். மேடையில் போடப்பட்டிருந்த திருமண நாற்காலியில் அவர் வசதியாக அமர்ந்திருக்கிறார். சில நேரம் கழித்து மேடைக்கு வரும் மணமகளும் நாற்காலியில் அமர்கிறார். 

ALSO READ | என் தேவதை வந்துட்டா!! தேம்பி அழுத மாப்பிள்ளை, தேற்றிய மணப்பெண், வைரலான வீடியோ 

அதன் பிறகு வீடியோவில் வரும் காட்சிகளைப் பார்த்து நம்மால் சிரிப்பை அடக்க முடியாது என்பது உண்மை. 

சிறிது நேரம் கழித்து திருமண சடங்குகளை முடிக்க மணமகன் மணமகள் இருவரும் அழைக்கபடுகிறார்கள். மணமகன் உடனடியாக எழுந்து நிற்க, மணமகளோ ஆழ்ந்த உறக்கத்திற்கு போய் விட்டதைக் காண முடிகின்றது. மணமகன் நின்றுகொண்டு காத்திருப்பதையும், மணமகள் நிம்மதியாக தூங்குவதையும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. 

உறக்கத்தில் உலகம் மறந்த மணமகளின் வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் wedabout என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் (Netizens) பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

'பாவம், எத்தனை நாட்களாக பறிபோன உறக்கமோ' என ஒருவர் மணமகள் மீது பரிதாபப்பட, 'திருமணமே ஆனாலும் தூக்கத்தை மிஸ் பண்ண முடியுமா?' என ஒருவர் நக்கலடித்தும் உள்ளார்!!

ALSO READ | பந்தாவா பைக் ஓட்டி பக்காவா மாஸ் காட்டிய மணப்பெண்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News