அரைநொடியில் அறிவாளியாகும் மந்திரம் - வைரல் வீடியோ

அரைநொடியில் அறிவாளியாக வேண்டும் என்றால் இந்த வீடியோ உங்களுக்கு வழிகாட்டும்

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2022, 02:39 PM IST
  • ரோபோவை விஞ்சும் சிறுவனின் செய்கை
  • அரைநொடியில் அறிவாளியாக மந்திரம்
  • சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரல்
அரைநொடியில் அறிவாளியாகும் மந்திரம் - வைரல் வீடியோ  title=

அறிவாளியாக, அதாவது நான்கு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும் பொதுவான ஆசை. ஆனால், அதற்கு படிக்க வேண்டும், சில இடங்களுக்கு செல்ல வேண்டும், விவரம் தெரிந்தவர்களுடன் பேச வேண்டும். இதெல்லாம் அறிவாளியாக வேண்டும் நினைக்கும் பலரிடம் இருப்பதில்லை. அடைய வேண்டிய இலக்கை அடைய குறுக்கு வழி தேடுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். 

மேலும் படிக்க | நாய்க்கு மசாஜ் செய்யும் மியாவ்..மனதை மயக்கும் வீடியோ!

அவர்களுக்கு எல்லாம் குருவாக வந்திருக்கான் ஒரு சிறுவன். ரோபோ படத்தில் ஒரு நொடியில் புத்தகங்களை வாசித்து, அதில் இருக்கும் தகவல்களை மெமரியில் பதிவேற்றிக் கொள்வதுபோல, இந்த சிறுவன் செய்யும் செய்கை, காண்போரை கலகலக்க வைக்கிறது. 

வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், புத்தகத்தை திருப்பும் சிறுவன், அந்த பக்கத்தை தொட்டு தகவல்களை தலையில் ஏற்றிக் கொள்வதுபோல் செய்கை செய்கிறான். அடுத்தடுத்த பக்கங்களுக்கும் அதையே அவன் செய்கிறான். இந்த வீடியோவை பார்க்கும் பலரும், சிறுவனின் செய்கை பார்த்து கலகலப்பாக சிரிக்கின்றனர். டிவிட்டரில் மட்டும் ஏறத்தாழ 8 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளது. ஒரு சிலர் தங்களுக்கு இந்த ஐடியோ வொர்க் அவுட்டாகவில்லை என கூறியிருப்பது தான் காமெடியின் உச்சம். 

மேலும் படிக்க | உணவளிக்க வந்த நபரை தாக்கிய முதலை: திகிலூட்டும் வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News