வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பும் நோட்டீஸ் செல்லும் -மும்பை ஐகோர்ட்!!

மக்களுக்கு வழக்கு தொடர்பான PDF வடிவத்தில் அனுப்பப்படும் எந்தவொரு அறிவிப்பும் செல்லுபடியாகும் என மும்பை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது!

Last Updated : Jun 16, 2018, 03:31 PM IST
வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பும் நோட்டீஸ் செல்லும் -மும்பை ஐகோர்ட்!! title=

மக்களுக்கு வழக்கு தொடர்பான PDF வடிவத்தில் அனுப்பப்படும் எந்தவொரு அறிவிப்பும் செல்லுபடியாகும் என மும்பை உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது!

மும்பையை சேர்ந்த ஜாதவ் என்பவர் எஸ்.பி.ஐ வங்கியில் இருந்து கடன் அட்டை (credit card) பெற்றுள்ளார். இவரது அட்டையில் 2010 ஆம் ஆண்டு ரூ.85,000 கடன் பாக்கி இருந்துள்ளது. இதனால், இவருக்கு 2015 ஆம் ஆண்டு 8 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வங்கி சுமார் ரூ.1.17 லட்சம் கடன் பாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. இவர் கடனை திருப்பி செலுத்தாததால் இவர் மீது வங்கி வழக்கு தொட்ரந்துள்ளது. 

இந்த வழக்கின் பேரில் ஜாதவ் என்பவரை ஆஜராகும்படியும் தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன், வங்கி நிவாகம் வங்கி சார்பில் ஜாதவின் மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமும், பிடிஎப் வடிவில் வாட்ஸ்ஆப் எண்ணிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, தான் வீடு மாறி விட்டதால், தனக்கு அந்த நோட்டீஸ் கிடைக்கவில்லை எனவும், அதனால் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் கோர்ட்டில் ஜாதவ் விசாரணையின் பொது மறுத்துள்ளார். அவர் இவற்றை படித்ததிர்க்கான ஆதாரங்களையும் வங்கி நிருபித்துள்ளது. 

இதையடுத்து, தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதி மன்றம் ஜாதவ் அந்த நோட்டீசை படித்ததற்கான எலக்ட்ரானிக் சான்றை காட்டி உள்ளது. மேலும், வழக்கு தொடர்பான நோட்டீஸ்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டாலும் அது செல்லத்தகுந்தவை என உத்தரவிட்டுள்ளது! 

 

Trending News