ஆகாசத்தில் பறந்த பறவையை அந்தரத்தில் பறந்து பிடித்த கருப்பு பூனை; வைரல் வீடியோ

ஆகாயத்தில் பறந்த பறவைக் கூட்டத்துக்குள் அந்தரத்தில் பறந்து ஒரு பறவையில் கருப்பு பூனை ஒன்றை இரையாக்கிய வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 6, 2023, 05:48 PM IST
  • பூனையின் வேட்டை வீடியோ
  • அந்தரத்தில் பறந்து பிடிக்கிறது
  • மெய்சிலிர்க்க வைக்கும் ஜம்ப்
ஆகாசத்தில் பறந்த பறவையை அந்தரத்தில் பறந்து பிடித்த கருப்பு பூனை; வைரல் வீடியோ title=

பூனைகள் வீட்டில் இருக்கும்போது சாதுவாக இருப்பதை தான் அதிகம் பார்த்திருப்பீர்கள். அதற்கு இரண்டு நாட்கள் சோறு மட்டும் போடாமல் இருந்து பாருங்கள். அப்போது தெரியும் அதனுடைய வேட்டையும் சேட்டையும். எங்காவது ஓடிப்போய் சுற்றித்திரிந்து எலி, ஒடக்கான் உள்ளிட்டவைகளை பிடித்துக் கொண்டு வந்துவிடும். அதுவும் வீட்டிற்கு வெளியில் வைத்து எல்லாம் சாப்பிடாது, அது தினமும் படுத்து உறங்கும் உங்கள் வீட்டில் பெட்ரூமில் அல்லது சமையலறையில் தான் விருந்தை முடிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தால் ஏதோ நாற்றம் வருகிறதே என சுற்றிப்பார்த்து கண்டுப்பிடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பூனையே இப்படி என்றால், காட்டில் இருக்கும் பூனையை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள்.

மேலும் படிக்க | ’பங்காளி அந்த பக்கம் கொஞ்சம் கூசுப்பா’ பாசத்தால் சிங்கத்தை உருக வைக்கும் நாய்: வைரல் வீடியோ

பெரிய விலங்குகளுக்கே இரை கிடைப்பது அவ்வளவு எளிது கிடையாது. பூனைக்கு எல்லாம் என்றால் அது கடினமாக உழைத்தால் தான். சமயோசித்தமாக செயல்பட்டால் மட்டுமே இரையை சாப்பிட முடியும். வயிராற பசியையும் போக்கிக் கொள்ள முடியும். அப்படி சமயோசித்தமாக செயல்பட்ட காட்டு கருப்பு பூனையின் வீடியோவை தான் நீங்கள் பார்ப்பீர்கள். அந்த வீடியோவில் ஆரம்பத்தில் சிறு குளத்துக்கு அருகில் காட்டு பூனை ஒன்று அமர்ந்திருக்கிறது. சுற்றுலா சென்றவர்கள் இந்த வீடியோவை எடுத்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் அங்கிருக்கும் நேரம்பார்த்து கூட்டமாக பறவைகள் அங்கு தண்ணீர் குடிக்க வருகின்றன.

அந்த கூட்டத்தில் பூனை அங்கு இருப்பதை பறவைகள் கவனிக்கவில்லை. தண்ணீர் குடிக்க அமரும் நொடியில் அமைதியாக அமர்ந்திருந்த பூனை ஜெட் வேகத்தில் மேலே எகிறுகிறது. அத்தோடு தன்னுடைய கூர்மையான பார்வையால் பறந்து கொண்டிருந்த பறவையையும் இலக்கு மாறாமல் வாயில் பிடித்து கவ்விக் கொள்கிறது. இவையெல்லாம் மிக மிக சொற்ப நொடிப்பொழுதுகளில் அரங்கேறுகின்றன. வீடியோவில் பார்க்கும் நமக்கே பிரம்மிப்பாக இருக்கும்போது, நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

அவர்களும் பூனையின் ஜம்பை பார்த்து மெய்சிலிர்த்துவிட்டனர். ஒரு பறவை வேட்டையாடப்பட்டதை உணர்ந்து கொண்ட மற்ற பறவைகளும் அங்கிருந்து வேகமாக பறந்து சென்றுவிட்டன. வனத்துறை அதிகாரியான @surenmehra என்பவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அத்துடன் கருப்பு பூனை இனங்கள் எப்போதும் தங்களுடைய வேட்டையில் 60 விழுக்காடு வெற்றி பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். பூனையின் இந்த சூப்பரான வீடியோ நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

மேலும் படிக்க | இணையத்தை தெறிக்கவிட்ட ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News