புதுடில்லி: தனது பெருமையை உயர்த்திக் கொள்ள நினைப்பவர்கள் வித்தியாசமான செயல்கள் மூலம் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க முயற்சிப்பார்கள். பிரபலங்களின் இதுபோன்ற பல கதைகளை கேட்டிருக்கலாம்.
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, டிப்ஸ் கொடுப்பது பலருக்கு வழக்கமாக இருக்கும். சரி, டிப்ஸ் எவ்வளவு கொடுப்பது? சிலர் எஞ்சும் சில்லறை காசுகளை வெயிட்டருக்கு கொடுப்பார்கள். தற்போது பலரும் கார்டுகளை பயன்படுத்தி பில் செலுத்தினாலும், ஒரு தொகையை ரொக்கமாக டிப்ஸ் கொடுத்துவிட்டு வருவதும் பழகிவிட்டது.
ஆனால் டிப்ஸ் என்பது பில் தொகையை விட கண்டிப்பாக குறைவாகத் தானே இருக்கும்?
ஆனால் 2500 ரூபாய் பில் தொகைக்கு டிப்ஸ் 11 லட்சம் ரூபாய் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார் ஒரு வாடிக்கையாளர். இந்த தாராள மனதுக்காரர், அமெரிக்காவின் ஒரு பணக்காரர். நியூ ஹாம்ப்ஷயரில், ஹோட்டலில் சாப்பிட்ட மனிதர், 16 ஆயிரம் அமெரிக்க டாலர்களை, அதாவது சுமார் 11 லட்சம் ரூபாய்களை பணியாளருக்கு டிப்ஸ் கொடுத்தார்.
வெயிட்டருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்த இந்த சம்பவம் 'ஸ்டம்பிள் இன்' ரெஸ்டாரண்டில் நடைபெற்றது. 37 டாலர்கள் அதாவது சுமார் 2500 ரூபாய் பில்லுக்கு பணம் செலுத்தும்போது, அதற்காக அவருக்கு இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது. பணம் செலுத்திய பிறகு, வாடிக்கையாளர் பார் உரிமையாளருக்கு 16000 டாலருக்கான காசோலையை கொடுத்தார்.
இந்த பணம் அனைத்தையும் ஒரே இடத்தில் செலவிட வேண்டாம் என்றும் அறிவுரை சொன்னார் தாராள மனது படைத்த வாடிக்கையாளர் என்று கடையின் உரிமையாளர் மைக் ஜாரெல்லா தெரிவித்தார். இதுவரை கேள்விப்பட்டிராத பெருந்தொகையை டிப்ஸ் கொடுத்த வாடிக்கையாளரின் பெயரை சொல்லவில்லை என்றாலும், அவருக்கு நன்றி தெரிவித்தார்.
முதலில் டிப்ஸாக இவ்வளவு பெரிய தொகைக்கான காசோலை இருப்பதைப் பார்த்தபோது, வெயிட்டரால் தனது கண்களையே நம்ப முடியவில்லை என்று சொன்னதாக, என்பிசி பாஸ்டன் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. உடனடியாக அவர், கேலி செய்கிறீர்களா என்று வாடிக்கையாளரிடம் கேட்டார். உடனே அந்த வாடிக்கையாளர், இல்லை, இது உங்களுக்கான டிப்ஸ் என்று சொன்னார்.
ALSO READ | சீறும் பாம்புகளா; இல்லை பட்டுப்பூச்சியா?; உண்மை என்ன?
உணவக உரிமையாளர் அந்த பில்லை போட்டோ எடுத்து தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டார். ஆச்சரியமான இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதும் வைரல் செய்தியாக மாறிவிட்டது.
அந்த சம்பவத்திற்குப் பிறகும், குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளர் பலமுறை தனது ரெஸ்டோ-பார்-க்கு வந்துள்ளார் என்று உணவகத்தின் உரிமையாளர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த தொகை எட்டு பார் அடெண்டர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டதாகவும், அந்தத் தொகையின் ஒரு பகுதி சமையலறையில் பணிபுரிபவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டதாக அவர் சொல்கிறார். இப்போது, ரெஸ்டாரண்ட் உரிமையாளர் மட்டுமல்ல, சமூக ஊடக பயனர்கள் அனைவரும் பெரிய மனது கொண்ட வாடிக்கையாளரைப் பாராட்டுகிறார்கள்.
READ ALSO | அழகிய தோகைகளை விரித்து ஆடும் ஆண் மயில்; ‘NO’ சொன்ன பெண் மயில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR