2020-ல் நொடிக்கு 2 முறைக்கு மேல் Swiggy-ல் order செய்யப்பட்ட ‘India’s Favourite Dish’ எது தெரியுமா?

ஆன்லைன் டெலிவரி தளமான ஸ்விக்கி 2020 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சில உணவு வகைகளைப் பற்றி செவ்வாயன்று ஒரு பட்டியலை வெளியிட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 23, 2020, 05:30 PM IST
  • சிக்கன் பிரியாணி இந்தியாவின் மிகவும் விருப்பமான உணவாக இருந்தது.
  • பிரியாணி நொடிக்கு இரண்டுக்கும் அதிகமாக முறைகள் ஆர்டர் செய்யப்பட்டது.
  • ஸ்விக்கி ஆகஸ்ட் மாதத்தில் 'ஸ்விக்கி ஹெல்த்ஹப்' என்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
2020-ல் நொடிக்கு 2 முறைக்கு மேல் Swiggy-ல் order செய்யப்பட்ட ‘India’s Favourite Dish’ எது தெரியுமா? title=

2020 ஆம் ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆண்டாக பெயர் சூடிக்கொண்டது. இந்த ஆண்டில் தொடர்பு இல்லாத வசதிகளுக்கும் சேவைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டன.

ஆன்லைன் டெலிவரி தளமான ஸ்விக்கி 2020 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட சில உணவு வகைகளைப் பற்றி செவ்வாயன்று தெரிவித்தது. இந்த உணவு வகைகளில் சில வகையான பிரியாணிகள் மிக அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாக ஸ்விக்கி கூறியுள்ளது.

சில வகை பிரியாணிகள் நொடிக்கு இரண்டுக்கும் மெற்பட்ட முறைகள் ஆர்டர் செய்யப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், வீட்டில் சமைத்த உணவு 2020 ஆம் ஆண்டில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதிகம் எடுத்துச் செல்லப்பட்ட உணவாக உள்ளது.

சிக்கன் பிரியாணி இந்தியாவின் (India) மிகவும் விருப்பமான உணவாக அதற்கு இருந்த இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. ஒவ்வொரு வெஜிடபிள் பிரியாணிக்கும் இணையாக ஆறு சிக்கன் பிரியாணிக்கள் ஆர்டர் செய்யப்பட்டன. ஸ்விக்கியின் வருடாந்திர ‘StatEATstics’ பகுப்பாய்வின் ஐந்தாவது பதிப்பின் தரவுகளின்படி, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பயனர்கள், ஸ்விக்கியில் தங்கள் முதல் ஆர்டராக சிக்கன் பிரியாணியை (Chicken Biryani) ஆர்டர் செய்து ஸ்விக்கியுடன் இணைந்தார்கள்.

“ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் அலுவலகங்களுக்கு நாங்கள் கொடுத்த ஆர்டர்களைப் போல ஐந்து மடங்கு ஆர்டர்களை நாங்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்தோம். ​​அந்த எண்ணிக்கை ஏப்ரல் மே மாதங்களில் 9 மடங்காக உயர்ந்தது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அலுவலக கபூசினோக்கள் மற்றும் மசாலா டீக்களை மிஸ் செய்த லட்சக்கணக்கான ஸ்விக்கி பயனர்கள், பல தேநீர் மற்றும் காபி வகைகளை ஆர்டர் செய்தனர்.

ALSO READ: Viral News: விபத்தில் சிக்கிய யானையின் உயிரை CPR மூலம் மீட்டெத்த மீட்புப் பணியாளர்

லாக்டௌனுக்குப் (Lockdown) பிந்தைய நாட்களில் ஸ்விக்கி சுமார் இரண்டு லட்சம் பானி பூரி ஆர்டர்களையும் டெலிவரி செய்தது. ஸ்விக்கி ஆகஸ்ட் மாதத்தில் 'ஸ்விக்கி ஹெல்த்ஹப்' என்ற ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) மிக அதிக அளவில் ஆரோக்கியமான உணவை ஆர்டர் செய்தார்கள். பெங்களூரு (Bengaluru) பயனர்களும் அதிக அளவில் ஆரோக்கியமான உணவு வகைகளை ஆர்டர் செய்தனர். Swiggy HealthHub-ல் 130% என்ற விகிதத்தில், ஆரோக்கிய உணவுகளுக்கான ஆர்டர்களில் அதிகரிப்பு இருந்தது.

மக்கள் சராசரியாக, இரவு உணவுக்கு 342 கலோரி என்ற அளவில் உணவு உட்கொண்டனர். மதிய உணவு 350 கலோரிகளாகவும் காலை சிற்றுண்டி 427 கலோரிகளாகவும் இருந்ததாக ஆய்வு தெரிவிக்கின்றது.

ஸ்விக்கியின் (Swiggy) உடனடி மளிகை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சேவை மையமான Swiggy Instamart, சுமார் 75,000 கிலோ வெங்காயங்களை டெலிவரி செய்தது.

"எங்களுக்கு இதுவரையிலான மிகக் குறுகிய டெலிவரி கோரிக்கை பெங்களூருவில் ஒருவரிடமிருந்து வந்தது. 600 மீட்டர் தூரத்தில் இருந்த அவர், அவர் வீட்டிலிருந்து காலியான தண்ணீர் கேனை எடுத்துச் சென்று கடையிலிருந்து அதற்கு பதிலான முழு வாட்டர் கேனை வாங்கி வரச் சொன்னார்” என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"எங்கள் மிக நீண்ட டெலிவரி ஆர்டர் கொல்கத்தாவில் வந்தது. 39 கி.மீ. தூரத்திற்கான இந்த ஆர்டரில் ஒரு சிம் கார்டை டெலிவரி செய்ய வேண்டி இருந்தது” என்று ஸ்விக்கி தெரிவித்தது.

ALSO READ: See Pic's: கர்ப்பமான நாய்க்கு மகப்பேறு போட்டோஷூட் நடத்திய நாய் உரிமையாளர்!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News