பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார் ...!

லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் செய்தி ஆன்லைனில் வெளிவந்ததும், இரங்கல் செய்திகள் ட்விட்டரில் ஊற்றத் தொடங்கின.

Last Updated : Nov 16, 2020, 10:57 AM IST
பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார் ...! title=

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹர்பஜன் சிங், அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ‘பிரெண்ட்ஷிப்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஆரி அர்ஜூனா நடிக்கும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார் லாஸ்லியா.

இதற்கிடையில் லாஸ்லியாவுக்கு விரைவில் கனாடாவை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெற போவதாக தகவல் வெளியானது. அந்த செய்திக்கு மறுப்பும் தெரிவித்தார் லாஸ்லியா.

 

ALSO READ | பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்? இவர்தாங்க மாப்பிள்ளை...

இந்நிலையில் கனடாவில் பணிபுரிந்து வரும் லாஸ்லியா மரியநேசனின் தந்தை மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். இதனால் லாஸ்லியாவுக்கு பலரும் சமூக வலைதளத்தில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள இயக்குநர் சேரன் , லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

ALSO READ | ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலம்

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News