புதுடில்லி: கோவிட் -19 தடுப்பூசி போடும் பணியின் மூன்றாம் கட்டத்தில், 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி பெற தகுதி உடையவர்கள் என அறிவித்தது. அதை அடுத்து 12+ குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாகக் கூறும் ஒரு விளக்கப்படம் சமூக ஊடக தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
மத்திய அரசு, இந்த தகவல் பொய்யான தகவல் என ஞாயிற்றுக்கிழமை (மே 9, 2021) அரசு கூறியுள்ளது. அரசாங்கம், ஒரு ட்வீட்டில், போலி செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து, இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
A tweet has claimed that Bharat Biotech's vaccine, Covaxin, has been approved for children above 12 years.#PIBFactCheck: This claim is #Fake. No such approval has been given by the Government of India. Currently, citizens above the age of 18 are eligible for #COVID19Vaccination pic.twitter.com/qdzBSfwllq
— PIB Fact Check (@PIBFactCheck) May 9, 2021
"பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியை, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று ஒரு ட்வீட் கூறியுள்ளது. இதுபோன்ற எந்த ஒப்புதலையும் மத்திய அரசு வழங்கவில்லை. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் மட்டுமே தடுப்பூசி பெற தகுதியானவர்கள். "
ALSO READ | கொரோனா காலத்தில் நோய் எதிப்பு சக்தியை அள்ளிக் கொடுக்கும் கற்றாழை, வேம்பு!
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை, அனைவர் மனதிலும் தொற்று பரவல் பயத்தை விதைத்துள்ளது. ஏனெனில் இந்தியா தினமும் நான்கு லட்சம் புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
மருத்துவ நிபுணர்களை மேற்கோள் காட்டி, COVID-19 மூன்றாவது அலையில், குழந்தைகளை அதிகம் தாக்கும் என செய்திகள் வருவதால் பெற்றோர்களின் கவலை அதிகரித்துள்ளது.
அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜய் ராகவன் கூறுகையில், “கொரோனா வைரஸ் மூன்றாம் அலை தவிர்க்க முடியாதது என்றாலும், நாம் தயாராக, உறுதியாக நடவடிக்கைகள் எடுத்தால் பெருமளவில் தடுக்கலாம் ” என கூறியுள்ளார்.
வைரஸின் முதல் அலை வயதானவர்களைத் அதிகம் தாக்கியது. இரண்டாவது அலையில் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், மூன்றாவது அலை குழந்தைகளுக்கு ஆபத்தானது என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையில், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை வாங்க அனுமதித்துள்ளது.
ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR