Video Viral: ஆழி அலைகளுக்குள்ளும் அசராமல் நிற்கும் லைட் ஹவுஸ்! ஆனந்த் மகேந்திரா வீடியோ வைரல்

Viral Video Of Anand Mahendra: ”கலங்கரை விளக்கமாக இருங்கள். அலைகள் உங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கட்டும், பிரச்சனைகளை, நம்பிக்கையால் எதிர்கொள்ளுங்கள். நிமிர்ந்து நின்று,தொடர்ந்து பிரகாசியுங்கள் என்ற பாடம் சொல்லும் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 20, 2023, 06:54 PM IST
  • கலங்கரை விளக்காய் உறுதியாய் நிற்கலாமா?
  • தொழிலதிபர் ஆனந்த மகேந்திரா டிவிட்டரில் பதிவிட்ட வீடியோ வைரல்
  • ஆழி அலைகளுக்குள்ளும் அசராமல் நிற்கும் லைட் ஹவுஸ்
Video Viral: ஆழி அலைகளுக்குள்ளும் அசராமல் நிற்கும் லைட் ஹவுஸ்! ஆனந்த் மகேந்திரா வீடியோ வைரல் title=

Lighthouse Video: ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன. ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய விஷயங்களை எளிதாய் புரிய வைக்கும் வீடியோக்கள் நமது கவனத்தையும் ஈர்க்கின்றன. ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஆச்சரியம், அதிர்ச்சி, நன்றி, காதல், பாசம் என பல விஷயங்களை சில புகைப்படங்களும், வீடியோக்களும் ஒற்றை நொடியில் புரிய வைத்து விடுகின்றன. இதற்கு உதவிபுரிகின்றன சமூக ஊடகங்களில் பகிரப்படும் அற்புதமான வீடியோக்கள் என்றால் அது மிகையாகாது.

சமூக ஊடகங்களில் வீடியோவின் தாக்கம்

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான அல்லது அச்சம் கொடுக்கும் வீடியோக்கள் அதிகம் விரும்பப்படுவதுடன், பகிரப்பட்டு அதிக அளவில் வைரலாகின்றன. அதிலும் ஆபத்து கால வீடியோக்கள், வைரல் வீடியோ என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.

அதில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவ்வப்போது டிவிட்டரில் பதிவிடும் வீடியோக்கள், அனைவரும் கவரும் வகையில் இருக்கின்றன. அவை, லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

நேரில் பார்க்கவே முடியாதவற்றை, பார்க்க வாய்ப்பு கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மஹேந்திரா பகிர்ந்திருக்கிரார். தற்போது சமூக ஊடகத்தில் சக்கைபோடு போடு. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்க

இந்த வீடியோவைப் பார்த்தால் ஆழி அலைக்குள் கம்பீரமாய் நிற்கும் கலங்கரை விளக்கம் தெரிகிறது. விண்ணை முட்டும் அலைகளால் அலைகழியாமல் நிற்கும் கலங்கரை விளக்கம் இது.

”கலங்கரை விளக்கமாக இருங்கள். அலைகள் உங்களைத் தாக்கிக் கொண்டே இருக்கட்டும், உங்களைத் தட்டிச் செல்ல முயலும் அலைகள் என்ற பிரச்சனைகளை, உங்கள் நம்பிக்கையால் எதிர்கொள்ளுங்கள். நிமிர்ந்து நின்று,தொடர்ந்து பிரகாசியுங்கள்” என்று இந்த வீடியோவுடன் ஆனந்த் மஹேந்திரா பதிவிட்டுள்ளார்.

தண்ணீருக்குள் நிற்கும் கலங்கரை விளக்கம், தன்னையும் கம்பீரமாய் நிலைநிறுத்திக் கொண்டு, மற்றவர்களுக்கும் வழிகாட்டுகிறது. அதேபோல, எந்த சமயத்திலும் நாம் அசராமல் நிற்க வேண்டும் என்ற படிப்பினையைத் தரும் வீடியோ இது.  

அலைகளுக்குள் கம்பீரமாய் நிற்கும் லைட் ஹவுஸ்  

ஆசைக்காக கடலில் பயணப்படும்போது, அதில் ஆபத்து குறைவாக இருப்பதில்லை. எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தனது கோர வடிவத்தை வெளிகட்டிவிடும்.

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

இந்த வீடியோவை பார்க்கும் நமக்கு ஆச்சரியம் ஏற்பட்டாலும், கலங்கரை விளக்கம் என்றால் என்ன என்பதன் முழுமையான அர்த்தம் புரிகிறது. வானைத் தொடும் அளவுக்கு மிக பிரம்மாண்டமான ஆழி அலைகளுக்கு மத்தியில் நிற்கும் கலங்கரை விளக்கை பார்கக்வே, திரில்லிங்கான அனுபவமாக இருக்கிறது என்பதால், இந்த வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News