நீ வேணும்னா சண்டைக்கு வாடா...வம்பிழுத்துவிட்டு ஓடி போன குட்டி யானை!

யானைக்கன்று ஒன்று அதற்கு எதிரே உள்ள நபரை வலியக்க சென்று சண்டைக்கு கூப்பிட்டுவிட்டு, பின்னர் ஓடிவிடும் காட்சி ஒன்று இணையத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 01:55 PM IST
  • அனைவரையும் ஈர்த்த குட்டியானையின் செயல்.
  • சண்டைக்கு கூப்பிட்டு பயந்து ஓடிய தருணம்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நீ வேணும்னா சண்டைக்கு வாடா...வம்பிழுத்துவிட்டு ஓடி போன குட்டி யானை! title=

யானைகள் பார்ப்பதற்கு மனதுக்குள் ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தினாலும், அவை செய்யும் குறும்புகள் சில மழலைகள் செய்வதை போல நம்மை ரசிக்க செய்கிறது.  அதிலும் குறிப்பாக பெரிய யானைகளை காட்டிலும் யானைக்கன்றுகள் தான் நம்மை குளுமைப்படுத்தும் விதமாக பல குறும்பு செயல்களில் ஈடுபடுகின்றன.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோகூட, யானைக்கன்று செய்யும் குறும்புத்தனம் தான், அதற்கு எதிரே உள்ள நபரை வலியக்க சென்று சண்டைக்கு கூப்பிட்டுவிட்டு, பின்னர் குடுகுடுவென ஓடிவிடுகிறது.  இந்த காட்சி இணையவாசிகள் பலரிடமும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது, மனதை அமைதிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைத்துள்ளது.

மேலும் படிக்க | பாதாம் சாப்பிடும் அணிலின் வீடியோ வைரல்

இந்த க்யூட் வீடியோவானது ட்விட்டரில், யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கின்றது.  அந்த வீடியோவில், யானைக்கூட்டங்கள் மேய்ந்துகொண்டும், அங்குமிங்கும் நடந்துகொண்டும் இருக்கின்றன, அவற்றிற்கிடையில் ஒரு யானைக்கன்று மட்டும் மத்தியில் நின்றுகொண்டு வித்தியாசமாக ஏதோ செய்து கொண்டு இருப்பதை காணமுடிகிறது.  தனது தும்பிக்கையை அங்கும் இங்குமாக சுழற்றிக்கொண்டு இருக்கும் அந்த யானைக்கன்று திடீரென்று நேராக எதையோ பார்த்தது போன்று ஓடுகிறது, பின்னர் அது தனக்கு எதிரே இருப்பவர்களை பார்த்து சண்டைக்கு அழைப்பது போல சைகை செய்கிறது.  அதன்பிறகு, என்ன நினைத்ததோ தெரியவில்லை, வந்த வழி பார்த்து திரும்பி குடுகுடுவென்று ஓடிவிடுகிறது.

 

இந்த காட்சி பார்ப்பதற்கு ரசிக்கும்படியாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை எழுபத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் கண்டு ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு நான்காயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல சிறப்பான கமெண்டுகளும் பதிவிடப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News