இரு பெண்களுடன் உலா வரும் ரவி சாஸ்திரி; வைரலாகும் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டு இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Jun 5, 2019, 04:37 PM IST
இரு பெண்களுடன் உலா வரும் ரவி சாஸ்திரி; வைரலாகும் புகைப்படம்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இரண்டு இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் உலக கோப்பை பயணத்தை துவங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் பயிற்சி குறித்து விமர்சனங்கள் எழ துவங்கிவிட்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டு பத்திரிக்கையாளர் டென்னீஸ் ப்ரீட்மேன்., இந்திய கிரிகெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இளம்பெண்கள் இருவருடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு., "இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பை தொடருக்கு தயார ஆனபோது.." என குறிப்பிட்டு இந்திய அணியை விமர்சித்துள்ளார்.

டென்னீஸ் ப்ரீட்மேனின் இந்த ட்விட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவிக்கும் விதமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அந்த வகையில் ஒரு ட்விட்டர் பயனர் "பைன் லெக்கில் பீல்டிங்..." என குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர் "நாம் களத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி நன்றாகவே விளையோடுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு நபர் "டியர் கேர்ஸ் ரவி சாஸ்திரி யார் என தெரியவில்லை என்றால் இந்த ப்ளேபாய் திரைப்படத்தை பாருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் பரவும் இந்த ட்விட்டுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி வருகிறது. 

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர் ஒருவர் "சாஸ்திரி ஒன்றும் வார்ணே போல் இல்லை. வார்ணேவுடன் இரண்டு பெண்கள் இருக்கும் வீடியோவே வெளியாகி வைரலானது நினைவில்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் தலைமை பயிற்சியாளர் தரப்பில் இருந்து இதற்கு பதில் ஏதும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News