எந்தவொரு சூழ்நிலையிலும் தங்க்கள் பொறுப்புகள் சரியாக செய்பவர்கள் தான் இராணுவ வீரர்களும், போலீஸ் அதிகாரிகளும் என்று பலர் அடிக்கடி கூறுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆம் மழையோ, புயலோ, வெய்யல் காலமோ அல்லது பணிக்காலமோ அனைத்து விதமான சூழ்நிலையிலும் மக்களுக்கு உதவ தயாராக இருப்பவர்கள் தான் நாட்டின் காவலர்கள். அப்படி ஒரு சம்பவத்துக்கு எடுத்துகாட்டாக அஸ்ஸாம் மாநிலத்தில் இளைய போலீஸ் அதிகாரியின் கடமை அமைத்துள்ளது
வேகமாக அடிக்கும் புயல், பொழியும் மழை, சாலையில் நீர் என மூன்றுக்கும் இடையில் பணியாற்றும் ஒரு இளைய போலீஸ் அதிகாரியின் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ படி, இந்த வீடியோவில் உள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் மிதுன் தாஸ் ஆகும். மழையின் நடுவில் பணியாற்றும் இந்த போலீஸ் அதிகாரி "ரெயின்கோட்" கூட இல்லாமல் நின்று வாகனங்களுக்கு வழிகளை காட்டுகிறார்.
இந்த வீடியோவை அஸ்ஸாம் காவல்துறை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது, அதில் "வேலைக்கு விசுவாசமாக இருக்கும் மிதுன் தாஸ் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்." கடமைக்கு முன்னாடி புயல் ஒரு பெரிய விசியம் இல்லை என்பதை எங்களுக்கு காட்டியுள்ளார். என பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
#WATCH A traffic police constable Mithun Das, continues his duty during a rainstorm at Basistha Chariali Traffic point in Assam's Guwahati. (31-03-2019) pic.twitter.com/HUtyeoaKUD
— ANI (@ANI) April 1, 2019