Anushka, Virat குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? புகைப்படம் இதோ…

அனுஷ்கா சர்மா, விராட் கோலி ஜோடி, தங்கள் மகளின் முதல் படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொள்ளும் இந்த பிரபலமான ஜோடி, தங்கள் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார்கள்.

Last Updated : Feb 1, 2021, 02:27 PM IST
  • விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவுடன் குழந்தை இருக்கும் புகைப்படம் வைரல்
  • குழந்தையின் பெயரையும் அறிவித்தனர்
  • தூக்கம் தொலைந்துவிட்டது என்கிறார் அனுஷ்கா
Anushka, Virat குழந்தையின் பெயர் என்ன தெரியுமா? புகைப்படம்  இதோ… title=

புதுடெல்லி: அனுஷ்கா சர்மா, விராட் கோலி ஜோடி, தங்கள் மகளின் முதல் படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொள்ளும் இந்த பிரபலமான ஜோடி, தங்கள் குழந்தைக்கு வித்தியாசமான பெயரை வைத்திருக்கிறார்கள்.
 
விருஷ்கா என்று அழைக்கப்படும் இந்த ஸ்டைல் ஜோடிக்கு சில வாரங்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு (Security) போடப்பட்டதோடு, எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி உரிய நேரத்தில் தகவல்களைத் தருவோம், எங்களை தொந்தரவு செய்யாதீர்கள், யாரும் குழந்தையின் புகைப்படத்தையும் எடுக்காதீர்கள் என்று விராட் கோலி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று விருஷ்கா தம்பதியினர் இன்று தங்கள் குழந்தையின் புகைப்படத்தையும், பெயரையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

 
 
 
 

 
 
 
 
 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

அதில் விராட் கோலியும், அனுஷ்காவும் குழந்தையை கொஞ்சிக் கொண்டு  இருக்கின்றனர். அந்த பதிவில், அனுஷ்கா தனக்கு பிறந்ததிலிருந்து கடந்த சில வாரங்களாக தனக்கு ஏற்பட்ட பல்வேறு உணர்ச்சிகளைப் பற்றி தெரிவித்திருக்கிறார். தங்கள் பிஞ்சுக் குழந்தையின் பெயர். புதிதாகப் பிறந்த குழந்தையின் பெயரையும் அம்மா அனுஷ்கா (Anushka Sharma) தெரிவித்தார். தங்கள் மகளுக்கு வமிகா (Vamika) என்று பெயர் என்ற விருஷ்கா ரகசியம் வெளியாகிவிட்டது.  

Also Read | விராட்-அனுஷ்காவிற்கு குழந்தை பிறந்ததற்கு வாழ்த்தி Amul வெளியிட்ட அசத்தல் Pic..!!!

ரசிகர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அனுஷ்கா, "நாங்கள் இருவரும் அனைவருக்குக் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக அன்புடன் வாழ்ந்துக் கொண்டிருந்தோம், ஆனால் எங்கள் குழந்தை வமிகா எங்கள் மகிழ்ச்சியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்! குழந்தையின் அழுகை, சிரிப்பு, சிணுங்கல், புன்னகை என பல்வேறு உணர்வுகளை பார்ப்பதில் எங்களுக்கு பேரின்பம் ஏற்படுகிறது. குழந்தை தனது உணர்வுகளை சில நொடிகளோ சில நிமிடங்களோ மட்டுமே வெளிப்படுத்தினாலும் அது எங்களுக்கு உலகத்திலேயே மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!" என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு புதிய தாயையும் போலவே, தூக்கமும் தனது வாழ்க்கையில் அரிய விஷயமாகிவிட்டது என்று அனுஷ்கா ஒப்புக் கொண்டார், "தூக்கம் குறைவாகத்தான் இருக்கிறது, ஆனால் எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. உங்கள் விருப்பம், பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

Also Read | ஆண் குழந்தையே வேண்டும் என்பது குறுகிய பார்வை: அடித்து தூள் கிளப்பும் அனுஷ்கா

அனுஷ்கா மற்றும் விராட் (Virat Kohli) ஜோடிக்கு ஜனவரி 11 ஆம் தேதி குழந்தை பிறந்தது. ஒரு நாள் கழித்து தங்கள் மகளின் தனியுரிமையைப் பராமரிக்க விரும்புவதால் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

"பெற்றோர்களாகிய, உங்களிடம் ஒரு எளிய வேண்டுகோளை முன்வைக்கிறோம். எங்கள் குழந்தையின் தனியுரிமையைப் பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம், உங்கள் உதவியும் ஆதரவும் எங்களுக்குத் தேவை" என்று தம்பதியர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர் விருஷ்கா என்று செல்லமாக அழைக்கப்படும் விராட் கோலி, அனுஷ்கா தம்பதியினர்.

Also Read | Instagram செல்வாக்கு பட்டியலில் 25வது இடம் விராட் கோலி, மனைவி அனுஷ்கா 24 வது இடத்தில்
 
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News