சாமி-2: த்ரிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

சாமி-2 படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேசை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Last Updated : Jul 4, 2018, 12:27 PM IST
சாமி-2: த்ரிஷா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்? title=

சாமி-2 படத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் தற்போது ஐஸ்வர்யா ராஜேசை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விக்ரம் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’. 

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

படப்பிடிப்பு தொடங்கியதும் த்ரிஷா திடீரென்று ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டுள்ளார். படக் குழுவினர்களுக்கும் தனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தான் விலகுகிறேன் என்று அவர் கூறியிருந்தார். 

தற்போது படக்குழுவினர் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

 

 

 

 

சாமி-2 படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் சம்பந்தமான காட்சிகளும் பாடல் காட்சியும் தற்போது படமாகி வருகிறது. 

Trending News