பலர் தங்கள் திருமணங்களின் போது அழுகின்றனர். குறிப்பாக பெண்கள்(மணமகள்). ஆனால் சீனாவை சேர்ந்த இளைஞர்(மணமகன்) இந்த வழக்கத்தை ஒரு புதிய மட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்...
செவ்வாய்க்கிழமை Weibo-ல் பரப்பப்பட்ட ஒரு வைரல் வீடியோவில், புயாங்கைச் சேர்ந்த 30-வயது சீன இளைஞர் ஒருவர் தனது திருமணத்தில் கட்டுப்பாடில்லாமல் அழுதுகொண்டிருப்பதைக் காணலாம். 7 முறை துணை மாப்பிளையாக நின்ற இவர், இறுதியாக தனக்கு திருமணம் நிகழ்நதை நினைத்து நெகிழ்ந்துள்ளார்.
நிகழ்வின் போது தனது உரையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "என்னால் இதை இனிமேல் வைத்திருக்க முடியாது. திருமணம் செய்து கொள்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. ஆனாலும் இதனை ஏற்றுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்., "நான் ஏழு முறை துணை மாப்பிள்ளையாக இருந்தேன், அவர்கள் (என் நண்பர்கள்) திருமணம் செய்துகொண்ட போதெல்லாம், நான் அவர்களுடன் சச்சரவு செய்துள்ளேன். இப்போது நான் திருமணம் செய்துகொள்கிறேன், அவர்கள் என்னிடம் அவ்வண்ணமே திருப்பித் தருகிறார்கள், என்றபோதிலும் நான் அதனை அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
தனது திருமணம் குறித்து உரையாற்றிய இளைஞர், தனது மனைவியை குறித்தும் குறிப்பிட மறுக்கவில்லை. தனது உரையில் அவர் தனது மனைவியை ஆழமாக நேசிப்பதாக ஒப்புக்கொண்டார். அதேவேளையில் அவர் தனது மாமியார் குறித்து பேசுகையில்,.. ‘தனது மாமியாரின் சமையல் திறன்களைப் பாராட்டினார்,’.
இறுதியாக தனது உரையினை அவர் முடிக்கையில்., "நான் இறுதியாக திருமணம் செய்துகொண்டேன்," என்று கத்தினார். அவரது உரத்த குரலை கேட்ட அவையினர் சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்ந்தனர். இந்த தருணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.