விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ

விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய யாருக்கு என்ன நடந்தது? என்பதுபோல் பார்க்கும் வீடியோ சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் குசும்பு புடிச்சவர் தான் போல.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 14, 2023, 08:21 PM IST
  • கார் மீது மோதி விழுந்த இளைஞர்
  • ஆனால் அங்க தான் டிவிஸ்டு
  • விழுந்த இளைஞரை தேடிய கார் ஓனர்
விபத்தில் சிக்கியவர் ஆடியன்ஸாக மாறிய விநோதம்: வைரல் வீடியோ title=

விபத்து என்பது யாருக்கும் நேரிடக்கூடாத ஒன்று. ஏனென்றால் அது ஒருவரை மட்டுமல்ல விபத்தில் சிக்கியவரின் குடும்பத்தின் வாழ்க்கையையும் சேர்த்து தலைகீழாக புரட்டிபோட்டுவிடும். அந்த நிலையை யாரும் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத சூழல் தான். அதனை யாராலும் மறுக்க முடியாது. அதேநேரத்தில், சில நேரங்களில் இக்கட்டான சூழல்கள் கூட காமெடியானதாக மாறக்கூடும். அதுவும் எதிர்பாராத சமயங்களில் தான் நடைபெறும். அந்த சம்பவத்தை ரசிக்காமல் இருக்க முடியாது. பிளான் பண்ணியெல்லாம் இப்படியொரு சம்பவங்களை செய்யவே முடியாது என்பார்களே, அந்த ரகம் தான் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ.

சைக்கிளில் வேகமாக வந்தவர் எதிர்வரும் காரின் மீது மோதி விபத்தில் சிக்கினாலும், எந்த பதற்றமும் படாமல் ஜாலியாக நின்று அங்கு யாருக்கு என்ன நடந்தது என்பதை வேடிக்கை பார்க்கிறார். காரில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் பதறிப்போகிறார்கள். சைக்கிளில் வந்தவருக்கு என்ன ஆனதோ என தெரியவில்லையே என அலறி துடித்து காரில் இருந்து கீழே இறங்கி பார்த்தால் சைக்கிள் மட்டும் தான் இருக்கிறது. ஆளைக் காணோம். எங்கடா போனார் என்று அவர்கள் அலறியபடி கார் சக்கரத்தையெல்லாம் கீழே குனிந்து, காரை சுற்றி பார்க்கிறார். அவர் எப்படி அங்கு இருப்பார். விபத்தில் சிக்கியவர் தான் ஒரு பல்டி கார் மீது அடித்து கூலாக இருந்து இந்த சம்பவத்தை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே. விபத்தில் வந்து விழுந்தவர் தான் அருகில் நிற்கிறார் என்று காரில் வந்தவர்களுக்கும் தெரியவில்லை. 

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். செம காமெடியாக இருக்கும். @Bacteria_Offl என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் அந்த வீடியோவில் மூன்று ரோடு சந்திப்பு இருக்கிறது. நேராக செல்லும் ஒரு சாலையில் இருந்து சைக்கிளில் வரும் நபர் வருகிறார். எதிர் பக்கம் இரு கார்கள் வந்து வேகமாக சைடில் செல்லும் சாலையில் திரும்புகின்றன. முதல் கார் சென்றுவிட, இரண்டாவது கார் திரும்பும்போது சைக்கிளில் வந்தவர் காரின் மீது மோதுகிறார். அதில் அந்த நபர் பெல்டி அடித்து கார் மீது விழுந்து எந்த அடியும் படாமல் எழுந்து நின்று கொள்கிறார். காருக்குள் இருப்பவர்கள் சைக்கிளில் வந்தவருக்கு என்ன ஆனது என இறங்கி பதறியடித்து தேடிக் கொண்டிருக்கும்போது, இவர் சைடில் கூலாக நின்று அவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்பதை வேடிக்கை பார்க்கிறார்.

ஜூலை 13 ஆம் தேதி பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இதுவரை 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது. கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், விபத்தில் எஸ்கேப்னா இப்டி இருக்கனும், நல்ல வேளை பிழைத்தான் என சிரிப்பு சிமிலியை போட்டிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவும் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: நீ நடந்தால் நடை அழகு... தத்தி தத்தி நடைபயிலும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News