Viral Video: இணையவாசிகளை கவர்ந்த மலைப் பாம்பின் வீடியோ

மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றை ஜே.சி.பி. இயந்திரம் தூக்கிச் செல்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 25, 2021, 08:41 AM IST
Viral Video: இணையவாசிகளை கவர்ந்த மலைப் பாம்பின் வீடியோ title=

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். 

அதன்படி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் பாம்பு (Snakes) ஒன்றை ஜே.சி.பி. இயந்திரம் வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ஒன்றில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்றை ஜே.சி.பி. இயந்திரம் தூக்கிச் செல்கிறது. இந்த வீடியோவை இதுவரை 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பார்வையிட்டுள்ளனர். 

ALSO READ: Viral Photo: சீறும் மூன்று பாம்புகளா; இல்லை பட்டுப்பூச்சியா; உண்மை என்ன..!!!

இந்த வீடியோ ஜார்கண்டின் சிந்த்ரியின் எஸ்சிஐ ஹரால் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட எல்லைச் சுவரின் உள்ளே இருந்ததாக சமூக ஊடகங்களில் பலர் கூறுகிறார்கள். எனினும், இந்த தகவல் தற்போது வரைவ் உறுதிப்படுத்தவில்லை.

பாம்புகள் அவற்றின் வாழிடங்களில் நிம்மதியாக விடப்பட்டால் இவ்வளவு உயரம் வரை வளரும் என்று கூறுகின்றனர். ஒரு பெரிய மலைப்பாம்பு JCB   இயந்திரம் தூக்கிச் செல்லும் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. 

வீடியோவை இங்கே பாருங்கள்:

 

 

ALSO READ: Tourist Snake: இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு பயணித்த கொடிய நச்சுப் பாம்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News