வைரல் வீடியோ: கேமராவில் எதிர்பாராமல் பதிவாகும் பல விஷயங்கள், ஆச்சர்யத்தைத் தருகின்றன. அதுபோன்ற ஒரு வீடியோ சீனாவில் இருந்து வெளிவந்துள்ளது. கிழக்கு சீனாவில் ஒரு கட்டிடத்தின் 19வது மாடியில் இருந்து பாட்டி ஒருவர் தவறுதலாக விழுகிறார். ஆனால் அவர் உயிர் பிழைத்ததற்கு சாட்சியாக இந்த காட்சி வீடியோ வைரலாகிறது.
82 வயதான மூதாட்டி, துணி உலர்த்தும் ரேக்கில் இருந்து தலைகீழாக தொங்குவதை சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில் (Social Media Video) காண முடிகிறது. துணி உலர்த்தும் ரேக்கே, பாட்டி கீழே விழாமல் தடுக்க, பாட்டி ரேக்கில் மாட்டிக் கொண்டு தலைகீழாக தொங்குகிறார்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யாங்சூவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பின் 19வது மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்துவிட்டார். துணிகளில் மாட்டிக் கொண்டதால் தான் அவர் உயிர் பிழைத்தார்.
இந்த வைரல் வீடியோவில் (Viral Video) , அந்த பெண்ணின் இரண்டு கால்களும் 18வது மாடியில் உள்ள பால்கனியின் துணி ரேக்கில் தொங்குகிறது. 17வது மாடியில் உடல் தொங்குவதைப் பார்க்க முடிகிறது.
An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8
— South China Morning Post (@SCMPNews) November 23, 2021
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மூதாட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் 18வது மாடி மற்றும் 17வது மாடியில் இருந்து அவரை காப்பாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு கயிறுகளை இணைத்து தீயணைப்பு வீரர்கள் செய்த முயற்சி வெற்றி பெற்றது. 18வது மாடியில் இருந்த ஊழியர்கள் அந்த முதியவரை மேலே இழுக்க, அதே நேரத்தில், 17வது மாடியில் இருந்த மீட்புப் பணியாளர்கள் (Rescue Team) பாட்டியை மேலே தூக்கினார்கள். இறுதியில் பாட்டி வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்பதோடு, அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த பெண் பால்கனியின் கயிற்றில் துணி காயப்போடும்போது தவறி விழுந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. பாட்டியை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை மக்கள் பாராட்டினர். "தீயணைப்பு வீரர்களின் அற்புதமான வேலை" என்பதே பலரின் பதிவுகளின் ஒரே சாராம்சமாக இருக்கிறது.
ALSO READ | திருமணத்தில் எற்பட்ட குளறுபடி, செம்ம காமெடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR