கன்னியாகுமாரி, இராமநாதபுரம் கடற்புகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் அலை சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது!
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது...
அடுத்த இரண்டு தினங்களுக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம் கடற்பகுதியில் சுமார் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் சீற்றம் இருக்கும். எனவே மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்களுக்கு முன்னதாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும் என இன்சாட் அமைப்பு தெரிவித்துள்ளது, எனவே கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம். கடலுக்குள் படகுகளை எடுத்துதச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 8.30 மணியளவில் துவங்கி நாளை மறுநாள் (ஞாயிறு) இரவு 11 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!