Mars Magnetotail: செவ்வாய் கிரகத்தில் மர்மமான புதிய துருவச் சுடர் விஞ்ஞானிகள் கருத்து

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான துருவச் சுடர் பற்றிய தகவல்களும் அதுகுறித்து விஞ்ஞானிகளின் கருத்தும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 30, 2022, 05:13 PM IST
  • செவ்வாய் கிரகத்தில் மர்மமான புதிய துருவச் சுடர்
  • விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு கிடைத்த பரிசு
  • செவ்வாயின் துருவச்சுடரின் அண்மை கண்டுப்பிடிப்பு
Mars Magnetotail: செவ்வாய் கிரகத்தில் மர்மமான புதிய துருவச் சுடர் விஞ்ஞானிகள் கருத்து title=

செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலத்தை எடுத்துச் சென்று பரப்புவது சூரியக் காற்று என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 

அதாவது, செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் காந்தத்துடன் இணையும் சூரியக் காற்று, சிக்கலான காந்தப்புலங்களை இரவு நேரத்தில் உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு "மார்ஸ் மேக்னெட்டோடைல்" (Mars Magnetotail) என்று பெயர்.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்மமான துருவச் சுடர் பற்றிய தகவல்களும் அதுகுறித்து விஞ்ஞானிகளின் கருத்தும்:
  
செவ்வாய் கிரகத்தின் மர்மமான துருவ ஒளியின் அற்புதமான படங்களை எமிரேட்ஸ் மார்ஸ் மிஷனின் (Emirates Mars Mission) "ஹோப் ப்ரோப்" படம் பிடித்துள்ளது.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன் நாசாவின் அரிய புகைப்படம்

இந்த ஒளி சிவப்பு கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் அதன் காந்தப்புலங்களுக்கும் சூரியக் காற்றிற்கும் இடையிலான உறவைப் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்கும் ஆராய்ச்சியாகும்.

துருவ விளக்குகள் அதாவது அரோரா என்பது பூமியில் காணப்படும் நட்சத்திரங்களைப் போல அதிர்வுறும் ஒளி அலைகள் ஆகும். 

சூரியனின் செயல்பாடு அதன் வளிமண்டலத்தை பாதிக்கும் போது அவை ஒரு கிரகத்தில் எதிரொலிக்கும்.செவ்வாய் கிரகத்தைச் சுற்றியுள்ள கிரகங்களுக்கு இடையேயான காந்தப்புலத்தை எடுத்துச் சென்று பரப்புவது சூரியக் காற்று என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 

அதாவது, செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் அது காந்தத்துடன் இணைந்து இரவில் சிக்கலான காந்தப்புலங்களை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது. இதற்கு "மார்ஸ் மேக்னெட்டோடைல்" (Mars Magnetotail) என்று பெயர்.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் உதிக்கும் சூரியன்

EMM இன் சமீபத்திய அவதானிப்புகளில் இதற்கு முன் பார்த்திராத ஒரு நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. இதை 'சைனஸ் டிஸ்கிரீட் அரோரா' (Sinous Discrete Aurora (SDA)) என்று கூறுகின்றனர். இது செவ்வாய் கிரகத்தின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை உள்ளடக்கிய ஒரு பெரிய அரோரா ஆகும்.

"2021 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஹோப் ப்ரோப் வந்த சிறிது நேரத்திலேயே SDA வை முதன்முதலில் பார்த்தபோது, ​​இதற்கு முன்னர் ஒருபோதும் சாத்தியமில்லாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொண்டோம்" என்று EMM அறிவியல் தலைவர் ஹெசா அல்-மத்ரூஷி தெரிவித்துள்ளார்.

அதனால்தான், இந்த துருவ விளக்குகளில் கவனம் செலுத்த முடிவு செய்ததாக அவர் கூறுகிறார்.

"வளிமண்டல நிகழ்வுகள் மற்றும் தொடர்புகளை ஆராய்வதற்காக கிட்டத்தட்ட முழு வளிமண்டலத்தின் படங்களையும் நாம் பெற முடியும்" என்று EMM அறிவியல் தலைவர் ஹெசா அல்-மத்ரூஷி அறிக்கையில் தெரிவித்துள்ளார். நாம் எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் துருவ விளக்குகளின் விளைவைப் பார்க்கிறோம் என்பதே இதன் பொருள்.

மேலும் படிக்க | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்

செவ்வாய் கிரகம் சூரிய புயலின் தாக்கத்தை அனுபவிக்கும் போது அரோரா அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, சூரியக் காற்றில் எலக்ட்ரான்களின் செயல்பாடு வழக்கத்தை விட வேகமாகவும் கொந்தளிப்பாகவும் இருந்தது. ஹோப் ப்ரோப் இதுவரை கண்டிராத சில விரிவான அவதானிப்புகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

"எங்களிடம் உள்ள கூடுதல் அலைவரிசை மற்றும் ஆதாரங்கள் நமக்கு புதிய கோணத்தை கொடுத்துகிறது. நாம் அரோரா பகுதியில் அதிக கவனம் செலுத்த முடியும்" என்று EMM திட்ட இயக்குனர் ஓம்ரான் ஷரஃப் கூறினார்.

புதிய அவதானிப்புகளில் சித்தரிக்கப்பட்டுள்ள புற ஊதா (UV) உமிழ்வு படங்கள், செவ்வாய் கிரகத்தின் மேல் வளிமண்டலத்தில், கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 130 கிமீ உயரத்தில் உள்ள ஆற்றல்மிக்க எலக்ட்ரான்கள் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளாக உடைகின்றன என்பதைக் காட்டுகின்றன.

EMM படி, இந்த எலக்ட்ரான்கள் சூரியக் காற்றிலிருந்து வந்து செவ்வாய் கிரகத்தின் காந்தப்புலத்தை அடைகின்றன. அங்கு மின்சார புலம் அவர்களுக்கு ஆற்றலை அளிக்கிறது.

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News