பல் துலக்க பயன்படும் ரோபோ: விரைவில் உங்கள் பயன்பாட்டுக்கு வரும் மைக்ரோபேட்

Microrobots in Real Life: தினசரி வாழ்க்கையில் மைக்ரோபேட் பயன்பாடு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்! பல் துலக்கவும், வாயைக் கொப்பளிக்கவும் ரோபோட்களை பயன்படுத்தும் நாள் நெருங்கிவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 19, 2022, 02:42 PM IST
  • வடிவ மாற்ற மைக்ரோபோட்களை உருவாக்கும் விஞ்ஞானிகள்
  • காந்தமானது மற்றும் இரும்பினால் ஆன பல் துலக்கும் பிரஷ்
  • மருத்துவத் துறையில் பயன்படும் மைரோபோட்
பல் துலக்க பயன்படும் ரோபோ: விரைவில் உங்கள் பயன்பாட்டுக்கு வரும் மைக்ரோபேட் title=

தினசரி வாழ்க்கையில் ரோபோக்களின் பயன்பாடு: விஞ்ஞானிகள் வடிவமாற்றும் மைக்ரோபோட்களை உருவாக்குகிறார்கள், அவை பல் துலக்க மற்றும் ஃப்ளோஸ் செய்ய முடியும் என்ற செய்தி, Microrobots in Real Life: தினசரி வாழ்க்கையில் மைக்ரோபேட் பயன்பாடு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம்! பல் துலக்கவும், வாயைக் கொப்பளிக்கவும் ரோபோட்களை பயன்படுத்தும் நாள் நெருங்கிவிட்டது என்பதை காட்டுவதாக இருக்கிறது. பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பல் துலக்க, வாய் கொப்பளிக்க உதவும் வடிவ மாற்ற மைக்ரோபோட்களை உருவாக்கியுள்ளனர்.

நீண்ட சரம் போன்ற வடிவங்களுடன் இணைந்து முட்கள் போன்ற அமைப்புகளை உருவாக்கக்கூடிய ரோபோ அமைப்பை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் இதை காந்தமானது மற்றும் இரும்பினால் உருவாக்கியுள்ளனர்.

தங்கள் கைகளைப் பயன்படுத்தி பல் துலக்குவதில் சிரமம் உள்ளவர்கள் மற்றும் தங்கள் பற்களை தாங்களே சுத்தம் செய்வதில் சிரமம் உள்ள முதியவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க | பூமியை நோக்கி வேகமாக வரும் மாபெரும் வால் நட்சத்திரம்

பென்ஸ் ஸ்கூல் ஆஃப் டென்டல் மெடிசின் பேராசிரியரும், ஒரு ஆய்வு இணை ஆசிரியருமான ஹியூன் கூ, இது பற்றி இவ்வாறு சொல்கிறார்: "வழக்கமான வாய்வழி பராமரிப்பு முறைகள் பற்களை சுத்தம் செய்வதில் சிரமப்படுபவர்களுக்கு சவால்களை ஏற்படுத்தும். "சுத்தம் செய்யக்கூடிய ஒரு ரோபோ கை" உடன் ஒப்பிடுகையில் மைக்ரோபோட்கள் நன்றாக வேலை செய்கின்றன.

பென் பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளியின் பேராசிரியரும், இந்த ஆய்வின் இணை ஆசிரியருமான எட்வர்ட் ஸ்டீகர், மேலும் சிறிய இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று நம்புகிறார்.

"நானோ துகள்களை காந்தப்புலங்கள் மூலம் வியக்கத்தக்க வகையில் வடிவமைத்து கட்டுப்படுத்தலாம்" என்று கூறும் ஸ்டீகர், "ரோபாட்டிக்ஸ் அமைப்பு மூன்றையும் தானியங்கி முறையில் செய்ய முடியும்" என்று மேலும் கூறினார்.

மேலும் படிக்க | சூரிய எரிப்பினால் இன்று ஜிபிஎஸ் சேவைகள் பாதிக்கப்படலாம்

மைக்ரோபோட்கள் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது? MRI நோயாளிகளுக்கு உட்செலுத்தப்படும் கான்ட்ராஸ்ட் ஏஜெண்டுகள் முதல் சில மருந்துகளுக்கான விநியோக முறைகள் வரை பயன்படுகிறது. மற்ற உயிரி தொழில்நுட்ப தயாரிப்புகளில் பயன்படுத்த இரும்பு ஆக்சைடு நானோ துகள்களைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மைக்ரோபோட் என்பது குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட மினி  ரோபோ ஆகும். நானோபோட்டை விட சற்று பெரியதாக இருக்கும் மைக்ரோபோட் நானோ அளவில் இருக்கும். சில நானோபோட்கள் மனித கண்ணுக்கு சட்டென்று தெரியாது. 

இவை பல தொழில்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  மருத்துவத்தில் ஆராய்ச்சி அல்லது அறுவை சிகிச்சைகள் என மருத்துவத் துறையில் மைக்ரோபோட்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பால்வீதியின் மிகப்பெரிய கருந்துளையில் கசிவு NASA தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News