நாசாவின் Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் வானவில்லை படம்பிடித்ததா

செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) பெர்சவரன்ஸ் ரோவர்  (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 6, 2021, 04:08 PM IST
  • இயற்கையாக பூமியில் மழை மற்றும் வெயில் அடிக்கும் போது வானவில் தோன்றும்.
  • வறண்ட வளிமண்டத்தை கொண்ட செவ்வாய் கிரகத்தில் எப்படி வானவில் தோன்றியது என வியக்கின்றனர் விஞ்ஞானிகள்.
  • 1990 களில் பாத்ஃபைண்டர் மிஷனின் போது செவ்வாய் கிரகத்தில் “பனிப்பாறைகள்” முதன்முதலில் கண்டறியப்ட்டன.
நாசாவின் Perseverance Rover செவ்வாய் கிரகத்தில் வானவில்லை படம்பிடித்ததா title=

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு  உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) பெர்சவரன்ஸ் ரோவர்  (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது.

வானவில் பூமியில் பொதுவாக காணப்படும் தோறும், மழையும் வெயிலும் இணைந்து வரும் போது வானின் வானவில் தோன்றுகிறது, ஆனால் இப்போது செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம் அனுப்பிய “வானவில்” புகைப்படம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

இயற்கையாக பூமியில் மழை மற்றும் வெயில் அடிக்கும் போது தோன்றும் வானவில், வறண்ட வளிமண்டத்தை கொண்ட செவ்வாய் கிரகத்தில் எப்படி தோன்றியது என  வியக்கின்றனர் விஞ்ஞானிகள். 

நாசாவின் (NASA) பெர்சவரன்ஸ் ரோவர், தனது  கேமராவில் இப்போது “வானவில்” என்று தோன்றும் படத்தைக் கிளிக் செய்து அனுப்பியுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு வானவில் ஏற்படக் காரணமான  இல்லை என்பதால்  இது ஒரு "டஸ்ட்போ" (dustbow ), அதாவது தூசிகளின் ஊடே ஏற்படும் வானவில் ஆக இருக்கலாம் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இதை ஆமோதிக்கின்றனர்,  "டஸ்ட்போ" நீர் துளிகளுக்கு பதிலாக தூசியால் ஏற்படும் வானவில் ஆகும்.

“டஸ்ட்போக்கள்” நம் அனைவருக்கும் புதியதாக இருந்தாலும், செவ்வாய் கிரகதில் பனி மிக அதிகம் இருப்பதால் “பனிவில்” ​​(icebows) அங்கே பொதுவானது. 2015 ஆம் ஆண்டில்  நாசா இந்த தகவலை வெளியிட்டது. 

1990 களில் பாத்ஃபைண்டர் மிஷனின் போது செவ்வாய் கிரகத்தில் “பனிப்பாறைகள்” முதன்முதலில் கண்டறியப்பட்டன.  அப்போது விண்கலம் செவ்வாய் வான பரப்பிற்கு மேலே மேகங்களை புகைப்படம் எடுத்தது. அவை பனித் துகள்களால் ஏற்பட்ட தோற்றமாக அவர்கள் கருதினர்.

ALSO READ | செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News