இது என்னடா புதுசா இருக்கு; இரட்டை குழந்தை ஆனா இரட்டையர்கள் இல்ல

Twin Babies but Not Twins: அதிசயம் ஆனால் உண்மை! 19 வயது தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் தந்தைகள் வெவ்வேறு! காரணம் என்ன தெரியுமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2022, 04:21 PM IST
  • ஒரு தாயின் இரட்டைக் குழந்தைகள்
  • இரட்டையர்களின் தந்தை வெவ்வேறாக இருக்க முடியுமா
  • அறிவியல் அதிசயம், இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தை
இது என்னடா புதுசா இருக்கு; இரட்டை குழந்தை ஆனா இரட்டையர்கள் இல்ல title=

ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தை வெவ்வேறாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பெண், இருவருடன் உடலுறவு கொண்ட பிறகு கர்ப்பமடைந்தார். ஆனால் ஒன்பது மாதங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் தந்தைகள் வெவ்வேறாக இருப்பது தெரியவந்தது. இதுபோன்ற நிக்ழ பெண்ணின் கருத்தரிப்பு லட்சத்தில் ஒன்று. ஒரு 19 வயது பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார், ஆனால் அவர்களின் உயிரியல் தந்தைகள் வேறுபட்டவர்கள். இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருந்தாலும், இது மிகவும் சாத்தியமான அறிவியல் உண்மை என்பது சாமானியர்களுக்கு அதிர்ச்சி கலந்த வியப்பைத் தருகிறது..

இப்படி ஒரு தாயின் கருவில் உருவாகும் இரட்டைக் குழந்தைகளின் உருவாக்கம், ஹீட்டோரோபேட்டர்னல் சூப்பர்ஃபெகண்டேஷன் என்று அழைக்கப்படுகிறது, இது மாதவிடாய் சுழற்சியின் போது வெளியிடப்படும் இரண்டாவது கருமுட்டையானது வெவ்வேறு ஆணின் விந்தணுக்களால் தனித்தனி உடலுறவில் கருத்தரிக்கப்படும்போது ஏற்படுகிறது என்று பயோமெடிகா என்ற மருத்துவ சஞ்சிகை கூறுகிறது.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் எப்போது தொடக்கம்?

ஒரே நாளில் இரண்டு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குழந்தையின் தந்தை யார் என்று கண்டுபிடிக்க, அந்த இரட்டை குழந்தைகளின் தாய், தந்தைவழி சோதனை எடுக்க முடிவு செய்தாள்.

குழந்தைகளின்ன் முதல் பிறந்தநாள் நெருங்கி வருவதால், குழந்தையின் தந்தையை அறிமுகம் செய்ய அந்த 19 வயது இளம் தாய் முடிவு செய்தார். ஒரு தான் உடலுறவு கொண்ட ஒருவர்தான், அந்தக் குழந்தைகளின் தந்தையாக இருக்க வேண்டும் என்று அனுமானித்த அந்தப் பெண் அவருடைய டிஎன்ஏவைச் சேகரித்து பரிசோதனை செய்தார். ஆனால் ஒரு குழந்தையின் டிஎன்ஏ மட்டுமே அந்த பொருந்தியது.

அந்த தாய்க்கு வயது 19 தான் என்பதும், அவர் கருதரிப்பதற்கான செயற்கை முறை எதையும் கையாளவில்லை என்பதாலும், டிஎன்ஏ சோதனையில் ஒரு தந்தையின் மரபணு மட்டுமே பொருந்தியிருப்பதால், அந்தப் பெண் ஒரே நாளில் வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டதால் இந்த அரிய கருதரிப்பு நிகழ்ந்திருக்கிறது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | TNPSC தேர்வில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் முக்கிய மாற்றம்! நீதிமன்றம் அதிரடி

மற்றுமொரு குழந்தையின் தந்தை யார் என்று தெரியாத நிலையில், தற்போது 16 மாத குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தற்போது தந்தைகளில் ஒருவருக்கே இருப்பதாக தாய் குளோபா கூறுகிறார். இந்த நிகழ்வு மிகவும் வித்தியாசமாக இருப்பதால் இது தொடர்பான முடிவுகளும் வித்தியாசமானதாகவே உள்ளன.  

இது பற்றி பேசும் தாய் குளோபோ, "நான்  உடலுறவு கொண்ட ஆண் யார் என்பது நினைவில் இருந்ததால், அவரை சோதனைக்கு அழைத்தேன், அது நேர்மறையாக இருந்தது. ஆனால் பரிசோதனை முடிவுகள் ஆச்சரியமாக இருந்தது. இப்படி நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்தே இல்லை" என்று தெரிவித்தார்.

ஒரே தாயிடமிருந்து உருவான இரண்டு கருமுட்டைகள் வெவ்வேறு ஆண்களின் விந்துக்களுடன் சேர்ந்து கருவாகும்போது, இது சாத்தியமாகும் என்று 19 வயது இளம் தாய் குளோபோவின் மருத்துவர் டாக்டர் துலியோ பிராங்கோ கூறுகிறார். குழந்தைகளும் தங்கள் தாயின் அதே மரபணு அமைப்பைக் கொண்டுள்ளனர் என்று மருத்துவர் மேலும் கூறினார். தனது வாழ்நாளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர் பார்க்கவில்லை என்றும், உலகில் 20 நிகழ்வுகள் மட்டுமே உள்ளன என்றும் டாக்டர் துலியோ பிராங்கோ கூறினார்.

மேலும் படிக்க | 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டி படுகொலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News