செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) பெர்சவரன்ஸ் ரோவர் (Perseverance Rover) என்ற விண்கலத்தை அனுப்பியது. கடந்த மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இந்த விண்கலம் ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது
தற்போது பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் செவ்வாய் கிரக்கத்தில் உள்ள மண் துகள்களின் மாதிரிகளையும் பாறைகள் மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. அந்த விண்கலத்துடன் இன்ஜெனியூனிட்டி (Ingenuity) என்ற சிறிய ஹெலிகாப்டர் ஒன்றும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 31 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பறந்து பல விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என நாசா தெரிவித்திருந்தது.
ALSO READ | விண்வெளியில் விவசாயம் சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
இந்நிலையில், நாசா அனுப்பிய இந்த ஹெலிகாப்டர் பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தில் இருந்து பிரிந்து, செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி மனித குல வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. இதனால், நாசா விஞ்ஞானிகள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் ட்வீட் செய்துள்ளனர்
#MarsHelicopter touchdown confirmed! Its 293 million mile (471 million km) journey aboard @NASAPersevere ended with the final drop of 4 inches (10 cm) from the rover's belly to the surface of Mars today. Next milestone? Survive the night. https://t.co/TNCdXWcKWE pic.twitter.com/XaBiSNebua
— NASA JPL (@NASAJPL) April 4, 2021
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு மிகவும் கரடுமுரடானது, எனவே சுற்றுப்பாதையிலிருந்து பார்க்கவோ அல்லது ரோவர் அங்கு செல்லவோ முடியாது. அத்தகைய சூழ்நிலையில், கடினமான இடங்களுக்கு பறந்து சென்று துல்லியமான படங்களை எடுக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில், செவ்வாய் கிரகத்தில் இரவு நேரங்களில் சுமார் உறைநிலைக்கு கீழே 90 டிகிரி செல்சியஸ் , அதாவது -90 டிகிரி செல்சியல் தட்பநிலை என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இந்த நிலையில் ஹெலிகாப்டர் அதிக தூரம் செல்ல முடிந்தாலே இந்த பணி 90% வெற்றிகரமாக இருக்கும். இது மட்டுமல்லாமல், வெற்றிகரமாக தரையிறங்கிய பிறகும் அது தொடர்ந்து செயல்பட்டாலே மிகப்பெரிய வெற்றி தான் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்
ALSO READ | செவ்வாய் கிரக மர்ம பூட்டின் சாவி சால்டா ஏரியில் உள்ளது: NASA விஞ்ஞானிகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR