செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ளது சீனா. இந்தத் தகவலை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்கா மட்டுமே செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாய் தரையிறங்கச் செய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்போது இந்த முக்கிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Jinping) வாழ்த்து தெரிவித்தார்.
"சவாலை நீங்கள் அனைவரும் தீரத்துடன் எதிர்கொண்டீர்கள். சிறப்பாக செயல்பட்டீர்கள். கிரகங்களை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை சேர்த்துள்ளீர்கள்" என்று சீன அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
#XiJinping sends congratulatory letter on Mars probe's historic landing https://t.co/sC6UfCS9Hv
— Zhang Heqing (@zhang_heqing) May 15, 2021
"உங்களுடைய மிகச்சிறந்த சாதனை நம் நாட்டு மக்களின் நினைவுகளில் என்றென்றும் பதிந்திருக்கும்" என்று சீன அதிபர் பாராட்டியுள்ளார்.
Also Read | மம்தா பேனர்ஜியின் தம்பி கொரோனாவுக்கு பலி
சுமார் 1700 GMT வெள்ளிக்கிழமை (0100 பெய்ஜிங் நேரம் சனிக்கிழமை) அன்று, தியான்வென்-1 (Tianwen-1) விண்கலம் சுற்றுப்பாதையை அடைந்தது. விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த தரையிறங்கும் தொகுதி மூன்று மணி நேரம் கழித்து சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்தது என்று அதிகாரப்பூர்வ சீனா விண்வெளி செய்தி China Space News தெரிவித்துள்ளது.
பிரபஞ்சத்தைப் பற்றிய ஆய்வில் பல நாடுகளும் ஈடுபட்டுள்ளன. தற்போது, செவ்வாய் கிரகத்தின் மீது அனைத்து நாடுகளின் கவனமும் குவிந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 (Tianwen-1) விண்கலன், கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ (rover) கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் எடை 240 கிலோ ஆகும்.
Also Read | கொரோனாவில் பசியாற்றும் பணியையும் தொடங்கியது அன்பு சுவர்
செவ்வாய்கிரகத்தின் புவியியல் அமைப்பு குறித்து இந்த தியான்வென்-1 (Tianwen-1) விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான புகைப்படங்களை எடுக்க சக்தி வாய்ந்த கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.
செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தியான்வென்-1 (Tianwen-1) ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பயன்படும்.
Also Read | உருவானது ‘டவ் தே’ புயல்; தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR