Facebook's AI நடைமுறை சாத்தியமானால், மனதில் நினைப்பது கம்ப்யூட்டரில் தெரியும்! தெரியுமா?

புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் கணினித் திரையில் படங்களாக உருவாவதும், எழுத்தாக பரிமாணம் பெறுவதும் சாத்தியம் என்கிறது புதிய தொழில்நுட்பம். இது நிதர்சனமானால் எப்படி இருக்கும் என்ற திகைப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2021, 02:38 PM IST
  • AI நடைமுறை சாத்தியமானால், மனதில் நினைப்பது கம்ப்யூட்டரில் தெரியும்!
  • ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பம் சாத்தியமா?
  • சாத்தியமானால் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
Facebook's AI நடைமுறை சாத்தியமானால், மனதில் நினைப்பது கம்ப்யூட்டரில் தெரியும்! தெரியுமா? title=

புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் எப்போதுமே பிரமிப்பை ஏற்படுத்துபவை. ஒருவர் மனதில் தோன்றும் எண்ணங்கள் கணினித் திரையில் படங்களாக உருவாவதும், எழுத்தாக பரிமாணம் பெறுவதும் சாத்தியம் என்கிறது புதிய தொழில்நுட்பம். இது நிதர்சனமானால் எப்படி இருக்கும் என்ற திகைப்பும் ஆச்சரியமும் ஏற்படுகிறது.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் ஒரு கைக்கடிகார சாதனத்தை உருவாக்கி வருகிறது, இது மூளையில் இருந்து மோட்டார் சிக்னல்களை ஒரு கணினியில் பெரிதாக்கி, அதற்குக் உருவத்தைக் கொடுக்கிறது. மூளையில் இருந்து கைக்கு அனுப்பப்படும் தகவல்களை மாற்ற அனுமதிக்கும். இது எலெக்ட்ரோமோகிராஃபி (electromyography (EMG)) எனப்படுகிறது. 

இது தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட "கற்பனை" திட்டங்களில் ஒன்றாகும், இது கணினிகளுடனான மனித தொடர்புகளின் பரிணாமத்தையே மாற்றக்கூடும். புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு, பயனர்கள் மூளையில் தோன்றுவது கணினித் திரையில் உருவாகும்.

Also Read | 13 வயது மாணவரை வலுக்கட்டாயமாக மணந்து முதலிரவு கொண்டாடிய ஆசிரியை! 

பேஸ்புக் முன்பு AR க்காக ஒரு இடைமுகத்தை உருவாக்குவதாகக் கூறியது, இது "நம்மைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்வதா அல்லது நமது சாதனங்களுடன் தொடர்பு கொள்வதா என்ற குழப்பத்தை போக்கும். இரண்டிற்கும் இடையே தேர்வு செய்யும் கட்டாயத்தை அகற்றும்."

" எப்போதும் கிடைக்கக்கூடிய AR கண்ணாடிகளைப் பயன்படுத்தி, தொடர்புகொள்வதற்கான இயற்கையான, உள்ளுணர்வு வழிகளை உருவாக்கி வருகிறோம், ஏனென்றால் இது அருகிலுள்ள மற்றும் தொலைதூர மக்களுடன் நாம் இணைக்கும் முறையை மாற்றும் என்று நம்புகிறோம்," என்று அது கூறியது.

பேஸ்புக் ரியாலிட்டி லேப்ஸ் (Facebook Reality Labs (FRL)) ஆராய்ச்சியானது, ஒரு சாதனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தக்கூடியது. நீங்கள் பயன்படுத்தக்கூடிய டிஜிட்டல் கைக்கடிகாரம் மூலம், மனதில் எழும் கட்டளைகள் மணிக்கட்டு வழியாக கைக்கு செல்லும் மின்சார மோட்டார் நரம்பு சமிக்ஞைகளை (electrical motor nerve signals) மொழிபெயர்க்கும். அதற்கு எலக்ட்ரோமோகிராபி (electromyography)  சென்சார்களைப் (sensors) பயன்படுத்துகிறது.

Also Read | கங்கையின் கழிவுகள் மணக்கும் ஊதுபத்தியாக மாறும் மாயம்

இந்த சமிக்ஞைகள் உங்கள் சாதனத்திற்கு மிருதுவான ஒரு பிட் கட்டளைகளைத் தொடர்புகொள்வதற்கு உங்களை அனுமதிக்குக்ம். இது தனிப்பயனாக்கக்கூடிய மற்றும் பல சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தக்கூடியது.  

ஆச்சரியப்படுத்தும் தொழில்நுட்பங்கள் முதலில் மலைக்க வைத்தாலும், பிறகு பயன்பாட்டிற்கு வந்த பிறகு இயல்பானதாகிவிடுகிறது. அந்த வகையில் மனதில் தோன்றுவதை கணினியில் உருவம் கொடுக்க முடியும் என்ற தொழில்நுட்பம் அனைவருக்கும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு   

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News