Nature Wonders:5 வண்ணங்களில் பாயும் நீரின் ஓடை... இயற்கை எனும் ஓவியரின் அதிசயம்!!!

மழை பெய்யும்போது ஏழு வண்ணங்களில் மிளிரும் வானவில்லை பார்த்திருக்கிறோம்.  ஆனால்  இன்று 5 வண்ண நதியைப் பார்த்து அதிசயம் ஏற்படுகிறது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2020, 11:57 PM IST
Nature Wonders:5 வண்ணங்களில் பாயும் நீரின் ஓடை... இயற்கை எனும் ஓவியரின் அதிசயம்!!! title=

மழை பெய்யும்போது ஏழு வண்ணங்களில் மிளிரும் வானவில்லை பார்த்திருக்கிறோம்.  ஆனால்  இன்று 5 வண்ண நதியைப் பார்த்து அதிசயம் ஏற்படுகிறது...

இயற்கை எப்போதும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. வானவில் ஒரு ஆச்சரியம் என்றால்,  பூக்களில் மறைந்திருக்கும் தேன் மற்றுமொரு அதிசயம். விதையில் இருந்து  பழங்கள் தோன்றுவது ஆச்சரியம்!!! பட்டாம்பூச்சியின் வண்ணங்கள் வியப்பளிக்கின்றன.. இதுபோன்ற அதிசயங்களில் பல வண்ணங்களில் மிளிரும்அற்புதமான நதியை பார்த்து ரசியுங்கள்.  
 
பொதுவாக, ஆற்று நீர் நீலம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். சூரிய ஒளி பட்டு ஆற்று நீர் பிரகாசிக்கும்போது அதன் நிறங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். இருட்டில்
நதி கருமையாகத் தெரிகிறது. அதேபோல் அழுக்கு சேரும்போது நதியின் நிறம் மாறும்.  ஆனால் இந்த காரணங்கள் ஏதுமின்றி, தென் அமெரிக்கா கண்டத்தில் கொலம்பியாவில் உள்ள ஒரு ஆற்றில் ஐந்து வண்ணங்கள் கொண்ட நீரைக் கண்டு ரசிக்கலாம்.

இந்த இயற்கை அழகை ரசிக்க மக்கள்  தொலைதூரத்திலிருந்து வருகிறார்கள். Crano Cristales என்று அழைக்கப்படும் இந்த நதியின் பெயர் மூலம்  ஸ்பானிஷ் வார்த்தையிலிருந்து வந்தது. ஆங்கிலத்தில் Crystal Channel என்று அழைக்கப்படும் வண்ண நதி இது.  

இந்த நதியின் நீர் ஆண்டு முழுவதும் இயல்பான நிறத்திலேயே இருக்கும். ஆனால் ஆண்டின் ஒரு கட்டத்தில் அது திடீரென்று தனது வண்ணங்களை மாற்றுகிறது. அந்த நேரத்தில் இதைப் பார்ப்பது மனதை குளிரச் செய்து இதமாக்கும்.  இந்த நதியின் வண்ணங்களைப் பார்க்கும்  பலர், வானவில் தண்ணீரில் உருகி வழிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 
வண்ணங்கள் மாறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?

சில மாதங்கள் அந்த பகுதியில் மழை பெய்யாதபோது ஆற்றில் தங்கியிருக்கும் Macarina Clavigera என்ற அரிய வகை தாவரம், நதி நீரை சிவப்பு நிறமாக மாற்றுகிறது.  இது  பிற வண்ணங்களாக மாறும். அதாவது மஞ்சள், நீலம், ஆரஞ்சு அல்லது பச்சை நிறமாக மாறும். ஐந்து வண்ணங்களின் இந்த கலவையுடன் நதி அற்புதமாக மாறுகிறது. இதுதான் ஐந்து வண்ண வற்றா நதியின் வண்ணங்களின் தோற்றத்திற்கான காரணம். 

Also Read | Mountains: மலைகளும், அவற்றின் பல்வேறு தோற்றங்களும்... 

சூரியனின் கதிர்கள் நதியில் விழும்போது நதி மிகவும் அழகாகிறது. ஆற்றின் அற்புதமான வண்ணங்கள் நிரம்பி வழிகின்றன. ஒரு கட்டத்தில் ஆற்றில் நீர் குறைந்து, நிறங்கள் அதிகமாகக் காணத் தொடங்கிவிடும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News