காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கோலாகலமாக தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
இதில் மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் 10 மீ பிரிவில் தங்கம் வென்றார். இதே போன்று மகளிர் துப்பாக்கிச்சுடுதல் 10 மீ பிரிவில் ஹினா சித்து வெள்ளி வென்றார்.
முன்னதாக இன்று காலை நடந்த பளு தூக்குதல் பிரிவில் 69 கிலோ எடைப்பிரிவிற்கான போட்டியில் இந்தியாவின் பூனம்யாதவ் தங்கம் வென்றார். தொடர்ந்து துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை இந்தியா வென்றதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 10 மீட்டர் துப்பாக்கிசூடுதலில் தங்கம் வென்ற மனு பாக்கர், வெள்ளி வென்ற ஹூனா சித்து மற்றும் ஆடவர் பிரிவில் வெண்கலம் வென்ற ரவிக்குமார் ஆகியோருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.