பி.என்.பி. வங்கி மோசடி தொடர்பாக சந்தேகத்துக்குரிய 120 நிறுவனங்களின் செயல்பாடுகளை அமலாக்கத்துறையினர் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: பி.என்.பி. வங்கி மோசடி தொடர்பாக சந்தேகத்துக்குரிய 120 நிறுவனங்களின் செயல்பாடுகளை அமலாக்கத்துறையினர் கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா.
இதுகுறித்து அவர் கூறியது....!
பஞ்சாப் வங்கி மோசடி தொடர்பாக இதுவரை 247 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. சுமார் 7,638 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இம்முறைகேட்டில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 120 நிறுவனங்களை அமலாக்கத்துறை கண்காணித்து வருகிறது. விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதால் அந்நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்தார்.